பன்னீர் சிக்கன் கறி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சிக்கன் 3/4 கிலோ(தோலுடன்)
பன்னீர் 200 கிராம்
சின்ன வெங்காயம் 15
பூண்டு 20 பல் சிறியது
இஞ்சி 1 விரல் அளவு
காஷ்மீர் மிளகாய் தூள் 1 டேக
தனியா தூள் 1 டேக
மஞ்சள் தூள் 1/2 டேக
சீரகம் மிளகு 1 டேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு , கருவேப்பிலை வெண்ணெய்,கொத்தமல்லி புதினா சிறிதளவு
செய் முறை#
1.இஞ்சி,பூண்டு வெங்காயம்,சீரகம்,மிளகு,கருவேப்பிலை அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு உருகியதும் கடுகு போடவும்,கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சிக்கன் போடவும்
3. சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு போடவும்.
4 . அரைத்த கலவையை வடச்சட்டியில் ஊற்றவும்
5.வெண்ணெயிலேயே வதக்கவும்,1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
6 சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வேக வைக்கவும்.
7 இறக்கும் போது பன்னீரை போட்டு ஒரு கிண்டு கிண்டவும்
8 கடைசியாக கொத்தமல்லி புதினா தளை தூவவும்
9 புதுவிதமான ருசியான சிக்கன் பன்னீர் மசாலா ரெடி.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
4 பேருக்கு பரிமாரலாம்
பி.கு.
சைவத்துகாரர்கள் சிக்கனுக்கு பதில் காளான்,காலிபிளவர் பயன்படுத்தலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media