பன்னீர் டிக்கா – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
பன்னீர் 100 கிராம்
குடமிளகாய்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய்தூள்
எலுமிச்சை சாறு சிறிதளவு
உப்பு
தேங்காய் எண்ணெய்
செய் முறை#
பன்னீர் , குடமிளகாய்,தக்காளி நமக்கு பிடித்த மாதிரி அரிந்து கொள்ளவும்.மேலே கொடுத்துள்ளவற்றை ஒன்றாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒரு கம்பியில் வரிசையாக குத்தி தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் தடவி மிதமான சூட்டில்
சிறிது நேரம் கலர் மாறும் வரை(இஞ்சி பூண்டு பச்சை வாசம் போகும் வரை) வைத்து எடுக்கவும்.
2 . சில்லி பன்னீர் #
மேலே கொடுத்துள்ள அதே மசாலா தடவி அதே தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.
செய்ய தேவையான நேரம் 15 நிமிடம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media