பன்னீர் டிக்கா மசாலா – பத்மஜா தமிழ்

பன்னீர் டிக்கா மசாலா!!

தே.பொ:
1. பட்டர்
2. பன்னீர்
3.வெங்காயம்
4.பூண்டு
5.தக்காளி
6.பீட்ரூட்
7.இஞ்சி பூண்டு கலவை
8.கரம் மசாலா
9.சில்லி பவுடர்
10.தனியா பவுடர்
11.உப்பு

செய்முறை:

1. 4 தக்காளி மற்றும் சின்ன துண்டு பீட்ரூட் குக்கரில் 3 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

2. பின் வேக வைத்த தக்காளி தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.

3. தோல் உரித்த தக்காளி மற்றும் பீட்ரூட் இரண்டையும் mixie இல் paste போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4. வடச்சட்டியில் பட்டர் சேர்த்து மிகச் சிறியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மிகச்சிறியதாக பூண்டினை சேர்த்து நன்றாக சுருண்டு வரும்வரை வதக்கவும்.

5. பிறகு இஞ்சி பூண்டு கலவை சேர்த்து வதக்கவும்.

6. அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி கலவையை சேர்க்கவும்.

7. இப்பொது கரம் மசாலா 1 spoon சில்லி பவுடர் 1 spoon தனியா பவுடர் 1 spoon மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

8. பின் கொதித்து நன்றாக சுண்டியதும் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.

9. ஒரு 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இரக்கி மல்லி தழை தூவி இரக்கவும்

சுவையான பன்னிர் டிக்கா மசாலா ரெடி….சுட சுட சாப்பிட வேண்டியது தான்!!

 

சமையல் குறிப்பு :

Follow us on Social Media