பன்னீர் டிக்கா – சரவணன் பெருமாள்

பன்னீர்_டிக்கா

சமையல் குறிப்பு:: சரவணன் பெருமாள்

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீ ஸ்பூன்
எழுமிச்சை சாறு -2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பன்னீர் – 200 கிராம் (சதுரமாக வெட்டியது)
குடைமிளகாய் – 1 (சதுரமாக வெட்டியது)
பெரிய வெங்காயம் – 1 (சதுரமாக வெட்டியது)
எண்ணெய் – 6 டீ ஸ்பூன்
டூத் பிக் – கொஞ்சம் (வரிசையாக குத்தி படம் காட்டுவதற்கு – அதையும் நான் இங்கு காட்டியிருக்கிறேன்)

செய்முறை:

மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய், டூத் பிக் நீங்களாக) ஒன்றாக கலந்து அறை மணிநேரம் ஊறவைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி பன்னீர், வெங்காயம், குடைமிளகாய் ஆகியவைகளை இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வேகவிட்டு தேவைப்பட்டால் வேகும் போது சிறிது எண்ணெய் சேர்க்கவும், வெந்ததும் டூத் பிக்கில் உங்களுக்கு பிடித்த ஆர்டரில் குத்தி அழகு படுத்தி சாப்பிடவும். டூத் பிக்கில் குத்துவதற்கு முன்பு டேஸ்டுக்காக சாப்பிட்டீங்கன்னா டூத் பிக்கில் குத்தும் தேவையிருக்காது ஏன்னா இருந்தாத் தானே குத்தறதுக்கு.

Follow us on Social Media