பன்னீர் தக்காளி பூண்டு சட்னி வருவல் – காயத்திரி அரசு

தேவையான பொருட்கள்:

பன்னீர் _ 200 கிராம்,

தக்காளி – 3,

பூண்டு – 10 பல் ,

கறிவேப்பிலை சிறிது,

வெண்ணெய் – 20 கிராம்,

சீஸ் – 20 கிராம்,

மிளகு தூள் – 1டீ .க,

தாளிக்க : கடுகு , சீரகம் , மிளகாய் வற்றல் -5 நல்லெண்ணெய் – 1 தே.க. செய்முறை : தக்காளி, பூண்டு , மிளகாய் வற்றல் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின் சட்டியில் நல்லெண்ணெய் உற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உப்புடன் அரைத்த விழுதை போடவும். சட்னி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பன்னீர் பெரிய துண்டுகளாக வெட்டி தவாவில் வெண்ணெய் விட்டு பொன் நிறமாக வருக்க வேண்டும். அதன் பிறகு இரு பக்கமும் சட்னி தடவி சிறிது மிளகு தூள் இட்டு மிதமான தீயில் வருத்து எடுக்கவும். பின் அதன் மேல் வெட்டிய சீஸ் துண்டு வைத்து பறிமாறவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media