பன்னீர் பசந்தா – டாலி பாலா

தேவை:

வீட்டில் எடுத்த பன்னீர் 500 gms ப்ளஸ் 50 க்ராம்

ஸ்டஃப் செய்ய வறுத்த பாதாம,முந்திரி தலா 15 க்ராம், பச்சை மிளகாய் 2, வருக்காத முந்திரி 30 கிராம்

தேங்காய் எண்ணை 100 ml, வெண்ணய் 30 கிராம், இஞ்சி பூண்டு விழுது

க்ரேவி செய்ய தேவை:
பெரிய வெங்காயம் 2 , தக்காளி 4,, பட்டை,கிராம்பு, கசகசா, ஜாதிக்காய்,மிளகாய் தூள், உப்பு

செய்முறை :

500 கிராம் பன்னீரை சிறிது பெரிய முக்கோணமாக வெட்டி வைக்கவும்

வறுத்த முந்திரி மற்றும் பாதாம், பச்சை மிளகாய் அரைத்து அதில் 50 கிராம் பன்னீர் துருவி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.30 கிராம் முந்திரியை கொஞ்சம் நீர் அல்லது பால் விட்டு கெட்டியாக அரைத்து வைக்கவும்

இரண்டு பன்னீர் முக்கோணம் இடையே அரைத்த விழுது ஸ்டஃப் செய்து முந்திரி பேஸ்ட் கொண்டு சீல் செய்யவும்,

ஒரு வாணலியில் ஐம்பது ml தேங்காய் எண்ணை விட்டு அதில் ஸ்டஃப் செய்து வைத்த பன்னீர் ஒவ்வொன்றாக இரண்டு புறமும் ரோஸ்ட் செய்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்,
இந்த மீதமுள்ள எண்ணையில் இஞ்சி பூண்டு விழுதை வதக்கி வைக்கவும்

வெங்காயத்தை பொடியாக வெட்டி 25 ml எண்ணையில் வதக்கி அரைக்கவும் தக்காளி சிறிதாக வெட்டி மீதி 25 ml எண்ணையில் மசாலா எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கி ஆறிய பின் அரைத்து பின் அரைத்த எல்லா விழுதும் சிறிது வெண்ணய உப்பு மிளகாய் தூள் ் சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கவும்.
அடுக்கி வைத்த பன்னீர் மேல் இந்த க்ரேவியை ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்

சமையல் குறிப்பு: 

https://www.facebook.com/1599232022

Follow us on Social Media