பன்னீர் பசு மஞ்சள் பொங்கல் – உமா தாரணி

தே.பொருட்கள்:

ஹோம் மேட் பன்னீர் : 500gm
இஞ்சி :துருவியது 2 டீ.ஸ்பூன்
சீரகம் : 2 டீ.ஸ்பூன்
மிளகு : 1 டீஸ்பூன்
பசு மஞ்சள் :துருவியது 1 டீ.ஸ்பூன்
க.வேற்பிலை : சிறிதளவு
பெ . காயம் : ஒரு சிட்டிகை
நெய் : 1 டேபிள் ஸ்பூன்
உப்பு : தே. அளவு

செய்முறை:

முதலில் பன்னீரை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.நாம் கிண்டும் போது அதுவே ஒன்றாகி விடும்.

சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் , மிளகு போட வேண்டும், மிளகு நன்றாகப் பொரிய வேண்டும், அப்போதுதான் அப்படியே கடித்துச் சாப்பிடலாம்.

பின் இஞ்சி, க.வேற்பிலை, பெ. காயம் , உப்பு சேர்க்க வேண்டும்.
நன்றாகப் இஞ்சி வதங்கியவுடன் உப்பு சேர்த்து உடன் பன்னீர் சேர்த்து கிளற வேண்டும்.

2 அல்லது 3 நிமிடம் அடுப்பை சிம்பில் வைக்க வேண்டும், அடுப்பை அணைத்து விட்டு துருவிய பசு மஞ்சள் சேர்த்து கிளற வேண்டும். நம் நார்மல் பொங்கலில் வரும் இலேசான மஞ்சள் நிறம் வரும். 10 நிமிடத்தில் ரெடியாகி விடும், தக்காளித்
தொக்குடன் அழகாகப் பொருந்திப் போகிறது.

விருப்பமான சட்னியுடன் சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு :

 

Follow us on Social Media