பன்னீர் மசாலா – ராசு ராஜா

200கிராம் பன்னீர் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். அதை தோசைக்கல்லில் போட்டு லேசாக பிஃரை செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் காய்ந்த மிளகாய் 7, மல்லி 2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், தேங்காய் துருவல் 4 ஸ்பூன், மிளகு 1/4 ஸ்பூன் இவற்றை வாணலியில் தனித் தனியாக வறுத்து சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு சோம்பு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். ( 2 பல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கியது) 2 தக்காளி (அ) ஒரு எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை கிளறி பன்னீர் சேர்த்து மல்லி தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: வழக்கமான மசாலா சேர்க்காததால் சுவை வித்தியாசமாக இருக்கும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100001207794423

Follow us on Social Media