பன்னீர் மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
பன்னீர் 200கிராம்
மிளகு தூள் 2 மேக
மஞ்சள் தூள் 1 தேக
தனியா தூள் 1 மேக
மிளகாய்தூள் 1 தேக
வெங்காயம் 1
இஞ்சி 1 இஞ்ச்
பூண்டு 15 பல் ( சிறியது)
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி புதினா சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு தேங்காய் எண்ணெய்
செய்முறை#
1முதலில் நீள வாக்கில் அரிந்தத பன்னீரை தோசைக்கல்லில் மிதமான சூட்டில் உப்பு வெண்ணெய் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
2.வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு போடுங்க,வெடித்ததும் கறிவேப்பிலை போடுங்க
3. சிறியதாக அரிந்த வெங்காயம் இஞ்சி பூண்டு மூன்றையும் போட்டு நன்றாக வதக்கியதும் மேலே கொடுத்துள்ள தூள்களை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.
4 தேவையான அளவு் உப்பு சேர்த்து கொள்ளவும்
5 பன்னீரை போடவும்
6 பன்னீர் போட்டதும் கண் கரண்டி போட்டு பன்னீர் உதிர்ந்து விடாமல் மெதுவாக திரும்பவும்
7 கொத்தமல்லி புதினா தூவி பரிமாரவும்
செய்ய தேவையான நேரம் 20 நிமிடம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media