பன்னீர் வல்லாரை சாண்ட்விச் – உமா தாரணி

தே.பொருட்கள்

பன்னீர் 500 கிராம்
உப்பு தே அளவு
மி. பொடி : அரை டீஸ்பூன்
வெண்ணெய் : 2 டீஸ்பூன்

சட்டினி செய்வதற்கு
இன்று வீட்டில் வல்லாரை இருந்ததால் நான் அதை உபயோகப் படுத்தினேன், புதினா கொத்தமல்லி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

வல்லாரைக் கீரை: 1 கப்
தக்காளி: 1
மி. வற்றல் 5
பெ. காயம் : சிறிதளவு
தேங்காய் : கால் மூடி
உப்பு : தே. அளவு
தே. எண்ணெய் : 1 டீஸ்பூன்

தே. எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் வல்லாரையை வதக்கவும். பின் தேங்காய், மிளகாய், உப்பு, பெ. காயம்,
சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும் |
செய்முறை –
பன்னீர் சற்றே அடர்த்தியாக இருக்க வேண்டும், 200 கிராம் பன்னீரை பாதியாக மேல் வாக்கில் இருந்து வெட்டினால் சரியாக இருக்கும.

இரும்பு தோசைக் கல்லில் வெண்ணெய் சேர்த்து, அதில் பன்னீரைப் போட்டு அதன் மேல் சிறிது உப்பு மி. தூள் சேர்த்து சிம்மில் வைத்து இரண்டு பக்கமும் , சிவக்கும் வரை வேக வைக்கவும்.

சிறிது ஆறியவுடன் வேண்டிய அளவு வெட்டி நடுவில் சட்டினி தடவி சாப்பிடலாம்.

எல்லோரும் சான்ட்விச்க்குள் பன்னீர் வைப்பார்கள், நாம்
பன்னீரையே சான்ட்விச் ஆக்குவோம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100000709680310

Follow us on Social Media