பள்ளிபாளையம் சிக்கன் – திலகவதி மதனகோபால்

சமையல் குறிப்பு:: திலகவதி மதனகோபால்
தேவையான பொருட்கள்

சிக்கன் 750 கிராம் ( சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் – 40 கிராம் துண்டு )

சிக்கன் ஊறவைக்க

இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
தயிர் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 3/4 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

ஃப்ரைகு

எண்ணெய் 2 1/2 மேஜைக்கரண்டி
வெண்ணை 1 மேஜைக்கரண்டி
வெங்காயம் 2 கப் ( பொடியாக நறுக்கியது )
வரமிளகாய் 2
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை 1 கைப்பிடி
இஞ்சி-பூண்டு விழுது 1 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
கிராம்பு 3
கரம் மசாலா பொடி 3/4 மேஜைக்கரண்டி
தேங்காய் துண்டு – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி

செய்முறை 1. சுத்தம் செய்த சிக்கனில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் , கொத்தமல்லி தூள், எலுமிச்சம்பழ சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஊறவைக்கவும். குறைந்தது இந்த கலவை 2 மணிநேரமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2. வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் துண்டுகளை நன்றாக வதக்கி கிளறி வைக்கவும்.

3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

4. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கறிவேப்பிலையை பொடித்து சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். வரமிளகாயை கிள்ளி போட்டு சேர்த்து நன்கு வதக்கவும். ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வேகவைக்கவும் சிறிது தண்ணீரை தெளித்து விடவும். உப்பு தேவையெனில் சேர்த்து கொள்ளவும்.

6. பாதி வெந்ததும் கரம்மசாலா தூளை சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கன் நன்கு வெந்தவுடன் தேங்காய் எண்ணெயில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து சுருள வதக்கவும்

Follow us on Social Media