பள்ளி பாளையம் சிக்கன் – ஆசியா உமர்

தேவையான பொருட்கள்;-
சிக்கன் – அரை அல்லது முக்கால் கிலோ
நல்ல எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய்வற்றல் – 10 (விதை நீக்கியது)
கரு வேப்பிலை – 2 இணுக்கு
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
உப்பு – தேவைக்கு.
தேங்காய்த்துருவல் – 2-3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-

சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்யவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு வெடிக்கவிடவும்,கருவேப்பிலை,வற்றல் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் சேர்க்கவும்.வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பிரட்டி விடவும்.அடுத்து சிக்கன் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி உப்பு சிறிது சேர்த்து வேக விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.

திறந்து சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியவுடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு மீண்டும் பிரட்டவும்.

விரும்பினால் கருவேப்பிலை அல்லது மல்லியிலை தூவி அலங்கரிக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.அப்படியே சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media