பாகற்காய் ஜூஸ், பொரியல், பச்சடி, சிப்ஸ் – தேன்மொழி அழகேசன்

1 . பாகற்காய் ஜூஸ்# 1 பாகற்காயை சிறிதாக அரிந்து மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.அரைத்ததை வடிகட்டி உப்பு சேர்க்கவும்.

2 . பாகற்காய் பொரியல்# சிறிதாக அரிந்த1 பாகற்காய் எடுத்துக் கொள்ளவும்.வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை பெருங்காயம் பாகற்காய்,1/2 பெரிய வெங்காயம் (சிறியது)உ ப்பு சேர்த்து வணக்கவும்.பின் பேலியோ மசாலா 1/2 தேக சேர்க்கவும்.சிறிதளவு வறுத்து பொடித்த வெந்தயம் சேர்க்கவும்.மிதமான வெப்பத்தில் வைத்து வணக்கவும்.இறக்கி வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடவும்.

3 . பாகற்காய் பச்சடி# வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை வர மிளகாய் பெருங்காயம் 1/2 வெங்காயம் ,2 பூண்டு பல் அரிந்தது,துருவிய 1 பாகற்காய்,உப்பு சேர்த்து நன்றாக வணக்கி எடுக்கவும்.நீர் சேர்க்க தேவையில்லை.அடுப்பை அணைத்து விட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

4 . பாகற்காய் பேன் சிப்ஸ்# வட்டமாக அரிந்த 1 பாகற்காயை 1/2 மேக பேலியோ மசாலா,உ ப்பு , எலுமிச்சை சாறுசேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து தோசைக்கல்லில் மிதமான சூட்டில் வேக வைத்து எடுக்கவும்.பொறுமையாக செய்யுங்க.

பாகற்காய் கசப்பு சுவை கொண்டது.செரிமாணத்திற்கும் பித்தத்தை குறைக்கவும் வல்லது.குடல் புழுக்கு சிறந்த மருந்து.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media