பாகற்காய் ரைத்தா – மாலதி

சமையல் குறிப்பு:: மாலதி

தேவையான பொருட்கள்
1. பாகற்காய் – 2
2. தயிர் – 1 – 2 கப்ஸ்
3. தேங்காய் எண்ணை – 2 மேஜை கரண்டி
4. பெரிய வெங்காயம் – 1
5. மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
6. உப்பு – தேவைக்கேற்ப
7. மஞ்சள் தூள்
8. கடுகு

செய்முறை
1. பாகற்காயை சிறு ரௌண்ட் பீஸ் கலாக நறுக்கி கொள்ளவும்
2. அதனுடன் உப்பு , மிளகாய் தூள் சேர்த்து சிறிது தேங்காய் எண்ணை விட்டு ஊற வைக்கவும்(குறைந்தது 30 நிமிடங்கள்).
3. வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில், தேங்காய் எண்ணை விட்டு, பாகற்காயை நன்கு வதக்கவும். பாகற்காய் பிடிக்காதவர்கள், சிறிது கூட எண்ணை விட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பாகற்காய் பிரியர்களுக்கு சற்று முன்னதே எடுக்கலாம். இறக்கும் முன்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். வதக்கிய பாகற்காயை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.
4. அதே வாணலியில் , தேங்காய் என்னை விட்டு, கடுகு பொரித்து, நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். பச்சடி வடை போகும் வரை வதக்கினால் போதுமானது.
5. இதை பாகற்காயுடன் சேர்த்து கலக்கவும்.
6. பாகற்காய் சிறிது ஆறியவுடன், தயிர் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும்.

ஒரு 15 நிமிடம் கழித்து மசாலா நன்கு கலந்தவுடன் பரிமாறவும். பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். பிடித்தவுடன் பாகற்காய் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளுங்கள்

Follow us on Social Media