பாதாம் குழி பணியாரம் – சாவித்திரி வேணுகோபாலன்

தேவையான பொருட்கள்:-
பாதாம் பவுடர் :- 1 கப்
தயிர் – 1/4 கப்
பால் – 1/4 கப்
சால்ட் – தேவையான அளவு
வெங்காயம் – 1 no பெரியது (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் – 1 no
கடுகு – 1/2 ஸ்பூன்
ஆலீவ் எண்ணெய் – 1 மேஜை கரண்டி
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை – தேவையான அளவு பொடியாக நறுக்கி கொள்ளவும்

செய்முறை:-
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை கலந்து தாளிக்கவும். ஒரு பாத்திரத்தில், பாதாம் பவுடர், தயிர், பால், பணியாற பதத்திற்கு கலந்து கொள்ளவும். தாளித்த பொருட்களை ஆரிய பின் கலந்து வைத்திருக்கும் மாவுடன் கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து பனியார கல்லில் இட்டு எடுத்தால், சுவையான பாதாம் குழி பணியாரம் தயார்!!

பிடித்த சட்னி உடன் சாப்பிடலாம்!!

சமையல் குறிப்பு:

பஹிரதி வேணுகோபாலனின் தாயார் சாவித்திரி வேணுகோபாலன்

 

Follow us on Social Media