பாதாம் மசாலா இட்லி – தேன்மொழி அழகேசன்

காளான் குழம்பு
தேவையான பொருட்கள்#
பாதாம் 75 (நம் முறைப்படி ஊற வைத்தது)
வெங்காயம் 1
சீரகம்1 டீக
மிளகு 1 டீக
மஞ்சள் தூள் 1/2 டீக
மிளகாய்தூள் 1/2 டீக
கரம்மசாலா 1/2 டீக
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
புளித்த கெட்டி தயிர் 2 டீக
செய் முறை#


பாதாமை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.சிறிதாக அரிந்த வெங்காயம்,சீரகம்,மிளகு,மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,கரம்மசாலா,கருவேப்பிலை வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.வதக்கிய கலவையை மாவுடன் உப்பு,தயிருடன் கலக்கவும்.சின்ன டம்ளரில் நெய் தடவி அதில் மாவை ஊற்றவும்.டம்ளரை இட்லி பானைக்குள் வைத்து வேக விடவும். வெந்ததும் இறக்கி வைத்து சிறிது ஆற வைத்து ஒரு தட்டில் கொட்டவும்.சுவையான மசாலா இட்லி ரெடி.
2. காளான் குழம்பு#
மொட்டு காளான் 1 பாக்கெட்
காஷ்மீர் மிளகாய் தூள் 1 டீக
தனியா தூள் 1 டீக
மஞ்சள் தூள் 1 டீக
கறிமசாலா 1/2 டீக
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீக
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
தேங்காய் பால் 1/2 கப்
கருவேப்பிலை சிறிதளவு
தாளிக்க கடுகு சோம்பு நல்லெண்ணெய்
உப்பு தேவையான அளவு
செய் முறை#


சின்ன வெங்காயம் தக்காளி,இஞ்சி பூண்டை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து,பின் காளானை போட்டு வதக்கி அரைத்த கலவை, மசாலா பொருட்கள் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.எண்ணெய் பிரிந்துவரும்வரை வேக விடவும்.இறக்கும்போது தேங்காய் பால் ஊற்றவும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media