பாதாம் மாவு ப்ரட் – ஜெனிஃபர்

செய்முறை:
வீட்டில் செய்த பாதம் மாவு – 2 கப்
( பாதம் பருப்பை ஊற வைத்து பின் உலர வைத்து தோலுடன் மிக்ஸியில் இட்டு அறைத்து கொள்ளவும்)

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
முட்டை – 3
பேக்கிங் சோடா – 1.5 தே.கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
Raw தேன் அல்லது Raw சுகர் – 1 மே. கரண்டி ( பேலியோவிற்கு இது தேவையில்லை, குழந்தைகளுக்காக மட்டும்)

செய்முறை:
முட்டையை நன்கு நுரைக்கும் அளவுக்கு கலக்கிக் கொள்ளவும்.
பாதம் மாவு, உப்பு, பேக்கிங் சோடா, சர்கரை அல்லது தேன், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாதவாறு கலக்கவும். கட்டியில்லாமல் கலவை இருந்தால் போதும் அதிகமாக கலக்க தேவையில்லை.
இந்த கலவையை கேக் பேனில் பார்ச்மெண்ட் பேப்பர் வைத்து அதன் மேல் ஊற்றி கேக் அவனில் 180டிகிரி வெப்ப நிலையில் 30 – 40* நிமிடங்களுக்கு வைத்து பேக் செய்யவும்.
*நேரம் உங்களுடைய அவனுக்கு ஏற்ப மாறலாம்.

அவகாடோ சாண்ட்விச் செய்முறை

தேவையான பொருட்கள்

அவகாடோ – 1 நன்றாக மசித்தது
சின்ன வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

தேவையானப் பொருட்கள் அனைத்தையும் நன்கு கலக்கவும்
பாதம் ப்ரெட்டை தோசைக் கல்லில் இரண்டு பக்கமும் சிறிதளவு சூடுபடுத்தி எடுத்து, அவக்காடோ கலவையை வைத்து மேலே இன்னொரு ப்ரெட் வைத்து மூடி மீண்டும் தோசைக் கல்லில் 30 வினாடிகளுக்கு சூடுசெய்து எடுக்கவும்.

சுவையான பாதம் ப்ரெட் அவக்காடோ சாண்ட்விச் தயார்.
உண்டு மகிழலாம்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/1605233823

Follow us on Social Media