பார்பிகியூ ஹரியாலி சிக்கன் டிக்கா – ஆசியா உமர்

தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் குவியலாய் – 1 டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
கசூரி மேத்தி – 1-2 டீஸ்பூன் (விரும்பினால் – நல்ல மணமாக இருக்கும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்

அரைக்க:-
மல்லி, புதினா, கருவேப்பிலை – தலா ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 3 (காரம் அவரவர் விருப்பம்)
எலுமிச்சை பழம் ஜூஸ் (சிறியது )– 1
உப்பு – தேவைக்கு.

செய்முறை:-

போன்லெஸ் சிக்கன் துண்டுகளை ஒரே போல் கட் செய்து அலசி தண்ணீர் சுத்தமாக வடிய வைக்கவும்.
மரக்குச்சியை தண்ணீரில் ஊற விடவும்.

மல்லி,புதினா,கருவேப்பிலை,பச்சை மிளகாயை லெமன் ஜூஸ், சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்தால் பச்சையாகவே இருக்கும்,நிறம் மாறாது.

சிக்கனுடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டி தயிர்,கரம் மசாலா,அரைத்த விழுது,கசூரி மேத்தி,எண்ணெய், உப்பு சிறிது தேவைக்கு சேர்த்து குறைந்தது 1-2 மணி நேரமாவது ஊற வைக்கவும். முதல் நாளே செய்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

பின்பு பார்பிகியூ அடுப்பில் நெருப்பு கணல் வந்தவுடன் மரக்குச்சியில் சிக்கனை கோர்த்து கம்பி தட்டில் வைத்து இரு புறமும் நன்கு வேகுமாறு சுட்டு எடுக்கவும்.

சுவையான ஹரியாலி சிக்கன் டிக்கா தயார்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000479778474

Follow us on Social Media