பாலக்கீரை – தேன்மொழி அழகேசன்

1 .பாலக்கீரை பொரியல்#
தேவையான பொருட்கள்
பாலக்கீரை 1 கட்டு
சின்ன வெங்காயம் 10 அரிந்தது
வரமிளகாய் 2
பூண்டு 5 பல் சிறியதாக அரிந்தது
சீரகம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
முட்டை 2
செய் முறை#
கீரையை நன்றாக கழுவி சிறிதாக அரிந்து கொள்ளவும்.வடச்சட்டியில் நெய் அல்லது வெண்ணெய் போட்டு கடுகு சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் பூண்டு பெருங்காயம் மிளகாய் வத்தல் போட்டு தாளித்து அரிந்த கீரையை போடவும்.கீரையிலுள்ள நீரே போதும் கீரைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து செய்யவும்.மூடி போட வேண்டாம் கலர்மாறி விடும்.கீரை நன்றாக வதக்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக வணக்கவும்.முட்டை வேண்டாம் என்றால் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்.

2 .கீரை ஆம்லெட்#
கீரையை நன்றாக கழுவி கொதிக்கும் நீரில் உப்பு போட்டு சிறிது நேரம் கழித்தி குளிர்ந்த நீரீல் போட்டு எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை முட்டை 2+ வெங்காயம்+ பூண்டு+ கறிவேப்பிலை+ பச்சமிளகாய்+ உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஊற்றவும்.தேவையான நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

3 . கீரை சூப்#
சுடு தண்ணீரீல் போட்டு ஆற வைத்து மிக்சியில் அரைத்த கீரை+ சீரகம் மிளகு தூள்+ இஞ்சி பூண்டு விழுது+உப்பு+ நெய்

4 கீரை ரசம்#
அரைத்த கீரை+ சீரகம் மிளகு தூள்+ பூண்டு+ கொத்தமல்லி+ நெய்+ உப்பு+ தக்காளி+ பெருங்காயம்+ வரமிளகாய் வழக்கமாக செய்யும் ரசம் முறை.இங்கு ரசம் வைத்துள்ளேன்.

நான்கு முட்டை+கீரை ஒருவருக்கு ஒரு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

செய்ய தேவையான நேரம் 10+10+10 நிமிடம்

பாலக்கீரை பயன்கள்#
1.பாலக்கீரை எளிதில் செரிமானமாகும் கீரைகளில் ஒன்று.குளிர்ச்சு தரக்கூடியது
2 .வைட்டமீன் ஏ பி சி ஆகியவும் பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன
3 . இரும்பு சத்து அதிகம் உள்ளது.இரத்த நோயாளிகளுக்கு மிகவும் பயன்தருகிறது
4 .நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தருகிறது
5 .புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது.அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
6 .போலிக்ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது
7 .மெக்னீசியம்,ஜின்க்,காப்பர்மற்றும் வைட்டமீன் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது
8 .கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன.வைட்டமின் எ அதி அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்புபோனறவை வராமல் தடுக்க உதவுகிறது(கூகுள்)

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media