பாலக் பன்னீர் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

பாலக் கீரை – 200 கி
பன்னீர் – 250 கி
வெண்ணெய் – தே . அளவு
சீரகம் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1
தயிர் – 1/2 குழி கரண்டி
கிரீம் – தே . அளவு
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தே . அளவு
எலுமிச்சை சாறு – 1ஸ்பூன்

#செய்முறை::

*பாலக் கீரையை கொஞ்சம் நீர் சேர்த்து 1 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்,
குறைவான நீர் போதும்.
*பாலக் கீரை சூடு ஆரியவுடன் பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
*வெண்ணெயுடன் சீரகம் தாளித்து வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது வதக்கி,
*மல்லி தூள்,கரம் மசாலா,தயிர் சேர்த்து
வதக்கவும் .
*பிறகு அரைத்து வைத்துள்ள பாலக் கீரை,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
*10 நிமிடம் கழித்து பன்னீர் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு
*எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு
கிரீம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*சுவையான பாலக் பன்னீர் தயார்.

{குறிப்பு: பாலக் கீரையுடன் 1 கைப்பிடி கொத்த மல்லி இலை சேர்த்து அரைத்தும்
செய்யலாம்,பன்னீருக்கு பதிலாக மீன், சிக்கன் சேர்த்தும் செய்யலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media