பிங்கர் பிஷ் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

முள் இல்லாத மீன் – 1/2 கி
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
முட்டை – 1
எலுமிச்சை – 1/2
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு – தே . அளவு
தேங்காய் பவுடர் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – தே. அளவு

#செய்முறை::

*மீனின் நடு முள்ளை எடுத்துவிட்டு விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ள வேண்டும்.
*மீனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,மிளகு சீரக தூள்,முட்டை,உப்பு,இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மீனுடன் கலக்க வேண்டும்.
*மீன் 15 நிமிடம் ஊறியவுடன் தேங்காய் பவுடரில் நன்றாக பிரட்டி எடுத்து
*தோசை கல்லில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்தால்
*சுவையான பிங்கர் பிஷ் தயார்.
*மயொனஸ் சாசுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

{குறிப்பு:தேங்காய் பவுடர் சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் ,வீட்டிலும் செய்யலாம்.
*தேங்காயை துறுவி சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
*பிறகு தேங்காய் பாலை வடிகட்டியில் வடித்து விட்டு மீதி இருக்கும் சக்கையை நிழலில் காய விடவும்.
*நன்றாக காய்ந்தவுடன் வாணலியில் சேர்த்து மிதமான சூட்டில் நிறம் மாறாமல் வறுத்து,சூடு ஆரியவுடன் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்து காற்று புகாத டப்பாவில் பிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media