பீப் சில்லி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

மாட்டு இறைச்சி (எலும்பில்லாமல் ) : 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது : இரண்டு தேக்கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய் விழுது : இரண்டு தேக்கரண்டி
மிளகு தூள் : இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் : கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு : ஒரு தேக்கரண்டி
வினிகர் : ஒரு தேக்கரண்டி
நெய் : தேவையான அளவு
இந்துப்பு : தேவையான அளவு

செய்முறை :

சுத்தம் செய்த மாட்டு இறைச்சியுடன், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மிளகு தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் இந்துப்பு சேர்த்து, இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

இந்துப்பு, எலுமிச்சை சாறு & வினிகர் ஆகியவற்றை சேர்க்கும்போது மாட்டு இறைச்சி நன்றாக மிருதுவாகிவிடும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில், உடைத்து ஊற்றி வைக்கவும்.

மிதமான தீயில், ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், கறியினை முட்டையில் தோய்த்து எடுத்து, நெய்யில் போட்டு வறுக்கவும் (Shallow fry).

சுவையான பீப் சில்லி தயார் !

( இந்த முறையில் ஆட்டுக்கறியும் செய்யலாம் )

சமையல் குறிப்பு :

Follow us on Social Media