பீர்கங்காய் கீரை கூட்டு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

பீர்கங்காய் : 1 ( 200 கிராம் )
முருங்கை கீரை : சிறிய கட்டு
வெங்காயம் : 1
தக்காளி : 1
தேங்காய் : அரை மூடி
கடுகு & சீரகம் : தாளிக்க
மிளகாய் வற்றல் : 3
உப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு , சீரகம் , மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் , பீர்கங்காய் , தக்காளி & கீரை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். வதங்கியவுடன் சிறிது தண்ணீர் & உப்பு சேர்த்து வேக விடவும் . பின்னர் தேங்காயை அரைத்து , வேகும் கூட்டுடன் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி பறிமாறவும்.

பீர்கங்காய் கீரை கூட்டு தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media