பீர்க்கங்காய் மசியல் – உமா தாரணி

தே. பொருட்கள்:

பீர்க்கங்காய் : அரை கிலோ
வெங்காயம்: 3
தக்காளி: 2
கடுகு : அரை டீஸ்பூன்
சீரகம் : அரை டீஸ்பூன்
தே.எண்எணய் : சிறிதளவு
ம. ெபாடி: கால் டீஸ்பூன்
மி. பொடி: கால் டீஸ்பூன்
உப்பு : தே. அளவு
தேங்காய்ப் பால் : அரை டம்ளர் (முதல் பால் )

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் பீர்க்கங்காய் சேர்க்கவும். பிறகு ம.பொடி, மி. பொடி, உப்பு சேர்த்து மூடி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.

நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும், ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.

பொதுவாக அரைத்து விட்ட கூட்டு சாப்பிட போர் அடிக்கும், இது செய்வதற்கு ஆகும் நேரத்தை விட சாப்பிட ஆகும் நேரம் மிகக் குறைவு .அவ்வளவு சுவை. வயிறும் நன்றாக நிறைகிறது , செய்வதும் சுலபம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media