பீர்க்கங்காய் ரோல் – வித்யா சவுந்தர்யா

தேவையானவை:

1.பீர்க்கங்காய் – 1
2 . முள்ளங்கி, கேரட் துருவியது – தலா3 ஸ்பூன்
(முள்ளங்கி துருவலை பிழிந்து விடவும்)
3. பச்சை மிளகாய் – 3
4 . குடமிளகாய் – 1
5. காய் வெட்டான தக்காளி – 1
6 . மல்லி தழை – சிறிது
7. சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
8. வெண்ணெய் – 25 கிராம்
9. தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

செய்முறை:
1. பீர்க்கங்காயை செதுக்கி, உட்பக்க வெள்ளை பகுதியை தனியே எடுத்து துண்டுகளாக்கவும்.
2. 2 இன்ச் பீர்க்கங்காய் பச்சை துண்டுகளை இட்லி பாத்திரத் தட்டில் 4 நிமிடம் வேக வைக்கவும்.
3. வாணலியில் வெண்ணெய் உருக்கி குடமிளகாய், பச்சை மிளகாய், கேரட், முள்ளங்கி துருவல், பீர்க்கங்காய் வெள்ளை பகுதி, தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும். சுண்டியபின் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
4. வெந்த பீர்க்கங்காயில் கலவையை நிரப்பவும்.
5. Air frier ல் 3 நிமிடம் க்ரில் செய்யவும் (அ) தோசைக்கல் சூட்டில் இரண்டு நிமிடம் உருட்டவும்.

விண்ணப்பம்: பீர்க்கங்காயை 3 – 4 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கவோ, கிரில் செய்வதையோ தவிர்த்து நீர் சத்துடன் சுவைத்து உண்ணவும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100000230691533

Follow us on Social Media