புடலங்காய் பஞ்சு மசாலா குழம்பு & மிளகு கூட்டு – மீனா

#புடலங்காய்_மிளகு_கூட்டு :
(1)புடலங்காயை–2, சிறிய சதுரங்களாக வெட்டி Cooker ல் இரண்டு விசில்விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
(2)மிக்சியில் மிளகு-1 ஸ்பூன்,சீரகம்- 1 ஸ்பூன்,கறிவேப்பிலை- 1 ஆர்க்கு,மி.வற்றல்- 2,தேங்காய்- 1 கப்(1/2 மூடி),ம.பொடி-1/2 ஸ்பூன்….எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.
(3)வெந்த புடலங்காய், அரைத்த விழுது இரண்டும் சேர்த்து,உப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கடாயில் நன்கு கொதிக்கவிட்டு இரக்கி….தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
#புடலங்காய்பஞ்சு_மசாலா_குழம்பு :
(1)ஒரு வாணலியில் நெய்-2 ஸ்பூன் ஊற்றி,சோம்பு-அரை ஸ்பூன் தாளித்து,பெ.வெங்காயம்- 1,தக்காளி-1 போட்டு நன்கு வதக்கவும்.
(2)பின் அதில் புடலங்காய் பஞ்சு(புடலங்காயில் நடுவில் உள்ள சதை பகுதி)போட்டு நன்கு வதக்கவும்.
(3)மேலும் அதில் கரம் மசாலா பொடி- 1ஸ்பூன்,மி.பொடி-அரை ஸ்பூன் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி…தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துது ஒரு கொதிவிட்டு இரக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media