புடலைங்காய் கடைசல் & மஞ்சள் பூசணி பொரியல் – தேன்மொழி அழகேசன்

1. புடலைங்காய் கடைசல்
தேவையான பொருட்கள்
புடலைங்காய் 1
மஞ்சள் தூள்
தக்காளி 2
சின்ன வெங்காயம் 6
பச்சமிளகாய் 2
பூண்டு 7 பல்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கறிவேப்பிலை நெய் பெருங்காயம் மிளகாய் வத்தல்
செய்முறை#
குக்கரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் (தாளிப்பு தவிர) அரிந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.மத்து போட்டு நன்றாக கடைந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வத்தல் கறிவேப்பிலை போட்டு தாளித்து கடைந்த புடலையை அதில் ஊற்றவும்.
பிகு:
தேங்காய் துருவல் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும் . புடலைங்காய் கடைசல், கூட்டு, பொரியல் , பொடிமாஸ்,துருவி வணக்கி துவையல்,துருவி வணக்கி தயிர் பச்சடி,சூப்,ரசம் பண்ணலாம்.

2 . மஞ்சள் பூசணி பொரியல்#
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்
கரம்மசாலா 1 தேக
மஞ்சள் தூள் 1 தேக
வெங்காயம் 1
பெருங்காயம்
பூண்டு 3 பல்
மிளகாய் வத்தல் 2
உப்பு தேவையான அளவு
தாளிக்க சோம்பு கடுகு கறிவேப்பிலை நெய் கறிவேப்பிலை
செய்முறை#
வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் பூண்டு மிளகாய் வத்தல் பூசணிக்காய் (நான் தோலோடு சேர்த்துக் கொண்டேன்) மசாலா உப்பு சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நீர் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி.தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளலாம்..
பிகு
பூசணிக்காய் சூப்,ரசம் ,தயிர் பச்சடி கூட்டு செய்யலாங்க
செய்ய தேவையான நேரம் 20+20 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media