புடலை கீரை கூட்டு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சிகப்பு தண்டு கீரை 1 கட்டு
புடலங்காய் 1
சின்ன வெங்காயம் 5
பூண்டு 6 பல்
வர மிளகாய் 4
சீரகம் 1 டீக
சோம்பு 1 டீக
தாளிக்க கடுகு தேங்காய் எண்ணெய்
தக்காளி 2
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
செய் முறை#
1 . கீரையை கற் பார்த்து ஆய்ந்து வைத்து கொள்ளவும்.
2 . புடலங்காயை சிறிதாக அரிந்து கொள்ளவும்(புடலைங்காய்,பீர்க்கைங்காய் சமைக்கும் முன் ஒரு துண்டு வாயில் வைத்து பார்க்கவும் கசப்பா இருந்தா சமைக்க வேண்டாம்)
3 . கீரை, சின்ன வெங்காயம் தக்காளி சீரகம் இவற்றை குக்கரில் வைத்து 1 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்,கீரையில் உள்ள நீரே போதும்.பாத்திரத்தில் ஊற்றி மத்தால் கடைந்து வைத்துக் கொள்ளவும்.கடையும் கீரையின் சுவை அதிகம்.கீரைக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்
4 . வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை,வர மிளகாய் , 3 சின்ன வெங்காயம் நீள வாக்கில் அரிந்தது,3 பல்அரிந்த பூண்டு ,அரிந்த புடலங்காய்,பெருங்காயம் சிறிதளவு தேவையான உப்பு போடவும் .
5 தேங்காய் எண்ணெயிலேயே காயை வணக்கவும்,நீர் சிறிதளவு தெளித்துக்கொள்ளவும்.காய் நன்றாக வெந்ததும் கடைந்த கீரையை ஊற்றவும்.ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
6 சுவையான கூட்டு ரெடி
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
7 .புடலங்காயில் புரதம்,கொழுப்பு,நார்ச்சத்து,கரோட்டின்,தயாமின்,ரிபோபுலோவின்,நியாஸின் போன்றவை உள்ளன.
8 .தண்டுக்கீரையில் பாஸ்பரஸ்,வைட்டமின் பி சி,நார்ச்சத்து உள்ளது.மலச்சிக்கலை குணமாக்கவல்லது.நன்றி கூகுள்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media