புதினா மிளகு பன்னீர் – யசோ குணா

தேவையான பொருட்கள் :

பன்னீர் 200 கி

வெங்காயம் அ பேலியோ காய்கறி (உ) பீர்க்கன் அ சுரைக்காய்
தக்காளி
பச்சை மிளகாய் தலா ஒன்று

இஞ்சி பேஸ்ட் – 1 தேக்கரண்டி

புதினா – 1 கட்டு

யோகர்ட் அ தயிர் – 1 தேக்கரண்டி

பேலியோ மசாலா. – 1 தேக்கரண்டி

மிளகுதூள் தேவைக்கு

பிரிஞ்சி இலை , பொடித்த பட்டை சிறிதளவு..

உப்பு & வெண்ணெய் தேவைக்கு

செய்முறை :

இஞ்சி , புதினா , தக்காளி , பச்சைமிளகாய் இவற்றை மிக்ஸியில் அரைத்து வைக்கவும் ..

பன்னீர் துண்டுகளை சுடுதண்ணீரில் அமிழ்த்தி , தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொண்டு , தயிருடன் சிறிதளவு உப்பு சேர்த்து பன்னீரை அரைமணி நேரம் ஊற வைக்கவும் ..

வாணலியில் வெண்ணெய் சேர்த்து , படை பொடி , பிரிஞ்சி இழை தாளித்து , பன்னீரை சேர்த்து மெதுவாக பிரட்டவும் , பாதி நிறம் மாறியவுடன் மசாலா மற்றும் உப்பு வெங்காயம் அ காய் சேர்த்து வதக்கவும் ..அரைத்துவைத்துள்ள கலவையை சேர்த்து பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும் ..

10 நிமிடங்களில் தண்ணீர் வற்றி விடும் , மிளகுதூள் சேர்த்து இறக்கவும் ..

பறிமாறும் போது , பச்சை வெங்காயம் சிறிதளவு தூவிவிடவும்.. பன்னீர் உணவுகளுக்கும் பச்சை வெங்காயத்திற்கும் பத்து பொருத்தமும் சும்மா பச்சக்கு பச்சக்குனு பொருந்துமுங்க.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media