புதினா முட்டை சிக்கன் – பார்த்தி பாஸ்கர்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 500gm
முட்டை – 2
மஞ்சதூள் 1 மேக
மிளகாய்தூள் 1 மேக
சின்ன வெங்காயம் – நறுக்கியது 4
தக்காளி – 1
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கு
கறிவேப்பிலை : சிறிது
கொத்தமல்லி : சிறிது

கீழே உள்ளவை அரைக்க:

சின்ன வெங்காயம் – முழுதாக 4
மிளகு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
பூண்டு : 4 பல்
இஞ்சி 2 இஞ்ச்
புதினா – 1 கப்

செய்முறை :
சிக்கனை குக்கரில் 1 கப் நீருடன் மஞ்சதூள் 1 தேக்கரண்டி சேர்த்து 5 விசில் விட்டு இறக்கிவிடவும்.
இஞ்சி, பூண்டு, முழு சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, புதினா மிக்சியில் போட்டு நன்றாக கெட்டியா அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி உப்பு சேர்த்து, குக்கரில் வேகவைத்த சிக்கனை நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வெந்தவுடன்,முட்டையை உடைத்து விட்டு கிண்டவும், முட்டை நன்றாக வெந்த பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்

சுவையான புதினா முட்டை சிக்கன் தயார் !

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100005811731329

Follow us on Social Media