புரோக்கோலி மசாலா & பொரியல் – திருப்பூர் கணேஷ்

1. புரோக்கோலி மசாலா

2. புரோக்கோலி பொரியல்

பேலியோ – சைவம்

ஊட்டியில சொந்தக்காரர் தோட்டத்தில் இருந்து புரோக்கோலிய ஃப்ரெஷ்சா வெட்டி கொடுத்து விட்டாங்க. இந்த ரெண்டு வாரமா புரோக்கோலிய வித விதமா செஞ்சு சாப்பிட்டாச்சு அதுல ஒரு ரெண்டு சூப்பரான டேஸ்ட்டான ரெசிப்பிய கீழே போட்டு இருக்கேன் பாத்துக்கோங்க. பாத்துக்கிட்டே இருக்காம செஞ்சு சாப்பிட்டும் பாருங்க 🙂
……………………………………………………………………………….

1. புரோக்கோலி மசாலா

தேவையான பொருட்கள்:

1. புரோக்கோலி – 500 கிராம்
2. தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
3. சின்ன வெங்காயம் – 5 to 8
4. கறிவேப்பிலை – 1 கொத்து
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி ( https://www.facebook.com/…/tam…/permalink/1850598078560462/… )
6. தக்காளி – 1
7. கறிமசாலா தூள் – 2 தேக்கரண்டி ( https://www.facebook.com/photo.php?fbid=1297767656942481&set=gm.1862765387343731&type=3 )
8. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
9. மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
10. சோம்பு – 1 ஸ்பூன்
11. தேங்காய்துறுவல் – 4 மேசைக்கரண்டி

10 மற்றும் 11ஐ கொஞ்சம் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி கறிமசாலா தூள் போட்டு 2நிமிடம் வதக்கி பின் வெட்டி வைத்த புரோக்கோலியை போட்டு அரை டம்ளர் நீர் தெளித்து மூடி போட்டு 10நிமிடம் வேகவைக்கவும். புரோக்கோலி 3/4 பாகம் வெந்துருச்சான்னு தண்டு நசுக்கி பாத்து விட்டு சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு 2 நிமிடம் ஓட்டிவிட்டு பின் அரைத்த விழுதை போட்டு 5 நிமிடம் விட்டு ட்ரை ஆனவுடன் இறக்கவும். இப்போது சுவையான புரோக்கோலி மசாலா தயார்.
——————————————————————————-

2. புரோக்கோலி பொரியல்

தேவையான பொருட்கள் :

1. புரோக்கோலி – 500 கிராம்
2. தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
3. சின்ன வெங்காயம் – 5
4. கறிவேப்பிலை – 1 கொத்து
5. தேங்காய்துறுவல் – 2 மேசைக்கரண்டி

6. சோம்பு – 1 ஸ்பூன்
7. சீரகம் – 1 ஸ்பூன்
8. பூண்டு – 4 பல்
9. வரமிளகாய் – 2 அ 3

6 முதல் 9 வரை உள்ளதை வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைத்து பின் பருபருனு (சும்மா 3 அ 4 சுத்து விட்டா போதும்) அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, போட்டு வதங்கிய பின் வெட்டி வைத்த புரோக்கோலியை போட்டு கால் டம்ளர் நீர் தெளித்து மூடி போட்டு 10நிமிடம் வேகவைக்கவும். புரோக்கோலி 3/4 பாகம் வெந்துருச்சான்னு தண்டு நசுக்கி பாத்து விட்டு அரைத்த பருபரு மசாலாவை போட்டு 5 நிமிடம் வேகவைத்து பின் தேங்காய்துறுவல் போட்டு 2 நிமிடம் ஓட்டிவிட்டு இறக்கவும். இப்போது சுவையான புரோக்கோலி பொரியல் சாப்பிட உங்கள் முன்னே 🙂
—————————————————————————-

சமையல் குறிப்பு :

Follow us on Social Media