புரோட்டீன் பற்றிய சந்தேகம் – விளக்கம்

//சார் பேலியோ உணவை பற்றி சில மருத்துவர்கள் எழுப்பும் சந்தேகம் , இந்த உணவு முறையில் பரோட்டீன் மட்டுமே அதிக அளவு உட்கொள்வதால் கிட்டனிக்கு பிரச்சனை வருமா என்பதுதான். ஏனெனில் நம் கிட்னி ஒரு குறிப்பிட்ட சதவீத புரோட்டீனை மட்டுமே பில்ட்டர் பண்ண முடியும் , இதனால் பிரச்சனை வருமா என்பதுதான். என் சில நண்பர்கள் இந்த டயட்டை எடுக்க ஆர்வமாக இருந்தாழும் இந்த சந்தேகத்தால் தயங்கி வருகன்றனர். இதறகு விளக்கம் தந்தால் பெரும்பாலனவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.//
A Small Write about Increasing Urea Levels during LCHF Diets like Paleo Diet. English Version Follows Tamil Version
உணவில் இருக்கும் புரதம் உடைக்கப்பட்டு அது யுரியாவாக மாறுகிறது இரத்தத்தில் யுரியா அளவு அதிகரித்தால் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும் . மூளை வேலை செய்யாது. இதை யுரிமிக் என்கபவோபதி என்பார்கள்.
எனவே
இந்த யுரியாவை வெளியேற்ற வேண்டும்
அதற்கு உடலில் உள்ள உறுப்பு(கள்) சிறுநீரகம் (ங்கள்)
-oOo-
ஒரு அணையை கற்பனை செய்து கொள்ளுங்கள்
அதில் நீர் வருகிறது
அதே போல் நீர் வெளியேறுகிறது
-oOo-
உள்ளே வரும் நீரை , உடலில் உற்பத்தியாகும் யுரியாவுடன் ஒப்பிடுங்கள்
வெளியேறும் நீரை, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் யுரியாவுடன் ஒப்பிடுங்கள்
-oOo-
அணையில் நீர் அளவு எப்பொழுது அதிகரிக்கும்
1. அதிகம் நீர் வந்தால்
2. குறைவான நீர் வெளியேறினால்
-oOo-
இரத்தத்தில் யுரியா அளவு எப்பொழுது அதிகரிக்கும்
1. அதிகம் யுரியா உற்பத்தி செய்யப்பட்டால்
2. குறைந்த யுரியா வெளியேறினால்
-oOo-
அதிகம் யுரியா உற்பத்தி செய்யப்படுவது எப்பொழுது
அதிகம் புரதம் உட்கொண்டால்
குறைந்த யுரியா வெளியேறுவது எப்பொழுது
சிறுநீரக செயல்பாடு குறைந்தால்
-oOo-
இரத்தத்தில் யுரியா அளவு எப்பொழுது அதிகரிக்கும்
1. அதிகம் புரதம் உட்கொண்டால்
2. சிறுநீரக செயல்பாடு குறைந்தால்
-oOo-
எனவே
இந்த உணவு முறையில் பரோட்டீன் மட்டுமே அதிக அளவு உட்கொள்வதால் கிட்னிக்கு பிரச்சனை வராது
ஆனால் ஏற்கனவே பிரச்சனை உள்ள கிட்னியால் இந்த அதிக அளவு யுரியாவை வெளியேற்ற முடியாவிட்டால், அதனால் யுரியா அளவு இரத்தத்தில் அதிகரித்து அதனால் மூளைசெயல்பாடும் பாதிக்கப்படலாம்.
-oOo-
அப்படி என்றால் என்ன உணவு உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு வரும்
மாவுச்சத்து அதிகம் உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு வரும்
-oOo-
சிறுநீரக பாதிப்பு இல்லாதவர்கள், வருங்கால சிறுநீரக பாதிப்பை தவிர்க்க உட்கொள்ள வேண்டிய உணவு எது
குறைமாவு நிறைகொழுப்பு உணவு
-oOo-
பிற கட்டுரைகளுக்கு www.tamilpaleodoctor.com
-oOo-
Proteins are broken down into Urea
Urea has to be excreted
Accumulation of Urea in Blood will affect Organs like Brain
Urea is excreted by Kidneys
-oOo-
The amount of Urea synthesised and the Amount of Urea Excreted are constant and hence urea level is maintained
Urea Level in Blood increases if
1. More Urea is Synthesised
2. Less Urea is Excreted
-oOo-
More Urea is Synthesised when More Proteins are taken
Less Urea is Excreted when Kidneys do not function properly
-oOo-
Urea Level in Blood increases if
1. More Proteins are Taken
2. Kidneys do not function properly
-oOo-
Which Food Has More Chance of Affecting Kidney
A Food with hIgh carbs has more chance of affecting kidney
Which Food has less chance of Affecting Kidney
A Low Carb High Fat Diet has Less Chance of Affecting Kidney
-oOo-
For Other Articles related to Low Carb High Fat Diet, please see www.chennaipaleodoctor.com
#பேலியோ #கிட்னி  #சிறுநீரகம் #சிறுநீரக செயலிழப்பு  #Paleo  #LCHF #LowCarbohydrateHighFat #Kidney  #RenalFailure

Follow us on Social Media