பூசணி பொரியல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

பூசணிக்காய் : கால் கிலோ
தேங்காய்த் துருவல் : 4 தேக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம் : 3
பச்சை மிளகாய் : 5
மிளகாய் வற்றல் : 4
இஞ்சி துருவல் : 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
கடுகு : 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை & உப்பு : தேவைக்கேற்ப.

செய்முறை :

பூசணிக்காயை தோல் சீவி கழுவி சிறிய நீளமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி துருவல், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கி வைத்த பூசணித் துண்டுகளைச் சேர்த்து தீயை மிதமாக வைத்து வதக்கவும். லேசாக நீர் தெளித்து வேக விடவும். பின்னர் உப்பு சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்து பரிமாறவும்.

பூசணி பொரியல் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media