பூண்டு கோழி வறுவல் – விஜயன் ராமலிங்கம்

பூண்டு கோழி வறுவல்

சமையல் குறிப்புவிஜயன் ராமலிங்கம்

நேரம் : பதினைந்து நிமிடங்கள் (சுமாராக)
தேவையான பொருள்கள் :
1. எலும்பு நீக்கிய கோழி – 2 0 0 கிராம் (துண்டுகளாக வெட்டியது)
2. தயிர் – ½ கப்
3. காய்ந்த மிளகாய் – 8 (வெந்நீரில் போட்டு எடுத்தது)
4. பூண்டு – 15 பல்
5. உப்பு – தேவையான அளவு.
6. மஞ்சள் தூள் – தேவையான அளவு.

செய்முறை:
1. காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் மண் / இரும்பு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய் விடவும். (வசதிக்கேற்ப நெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம்)
3. வெட்டி வைத்த கோழி இறைச்சியை எண்ணெயில் போட்டு வதக்கவும்.
4. மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
5. நன்கு வதக்கவும்.
6. 5 நிமிடங்கள் கழித்து தயிர் ஊற்றி நன்கு கிளறவும்.
7. இந்த தயிரிலேயே நன்கு வேகவேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
8. தயிர் சுண்டியவுடன், மிளகாய் பூண்டு கலவையை போட்டு நன்கு கிளறவும்.
9. பச்சை வாசம் போகும் வரை வேக விடவும்.
10. தேவைப்பட்டால் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இணைப்பு :
https://www.youtube.com/watch?v=PLVY2OsU-tg

பூண்டு கோழி வறுவல் தயார்.

 

Follow us on Social Media