பெல் பெப்பர் எக் ரிங்ஸ் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

குடை மிளகாய் – 2
முட்டை – 4
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
சோம்பு தூள் – 1 ஸ்பூன்
மிளகு சீரக தூள் – 1 ஸ்பூன்
புதினா – சிறிது
கொத்த மல்லி இலை – சிறிது
சீஸ் – தே . அளவு
உப்பு – தே . அளவு
வெண்ணெய் – தே . அளவு

#செய்முறை::

* குடை மிளகாயை ரிங் வடிவில் வெட்டி விதைகளை எடுத்து வைக்கவும்.
*முட்டையுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம்,புதினா,கொத்த மல்லி இலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
*முட்டை கலவையில் மிளகாய் தூள் ,மிளகு சீரக தூள்,சோம்பு தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலவையை அடிக்கவும்
*தோசை கல்லில் வெண்ணை சேர்த்து வெட்டிய குடை மிளகாயை இரு புறமும் திருப்பி 2 நிமிடம் வேக வைத்து,
*குடை மிளகாயினுள் முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
*2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு கொஞ்சம் வெண்ணெய் சேர்க்கவும்.
*அடுப்பை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.
*கடைசியில் தட்டில் வைத்து சீஸ் தூவினால்
*சுவையான பெல் பெப்பர் எக் ரிங்க்ஸ் தயார்.

{குறிப்பு : குடை மிளகாய் ரிங்கில் முழு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, பெப்பர் தூள் மட்டும் சேர்த்தும் செய்யலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media