பேலியோவால் இன்சுலின் சுரப்பது குறைவதால் பாதிப்புகள் ஏற்படுமா ? டாக்டர் புருனோ

குறைமாவுநிறைகொழுப்பு ஆதிமனித உணவு முறை (பேலியோ டயட்) குறித்த விவாதங்களின் போதும், உரையாடல்களின் போதும் இன்சுலின் குறித்த சில கேள்விகள் வெவ்வேறு வடிவங்களில் பல முறை கேட்கப்படுகின்றன. இன்சுலின் என்பது ஒரு முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்) அல்லவா ? குறைமாவுநிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பது குறையும் அல்லவா ? இதனால் பாதிப்புகள் ஏற்படுமே ? இப்படியாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் வருங்காலத்தின் கணையம் இன்சுலின் சுரப்பதை மறக்க வாய்ப்புள்ளதா ?

எனவே, இது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்

-oOo-

இன்சுலின் என்பது ஒரு நாளமில்லா சுரப்பி இயக்குநீர் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இந்த இயக்குநீரானது கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் உருவாகிறது. அங்கிருந்து நேரடியாக இரத்தத்தில் கலந்துவிடுகிறது.
இந்த இன்சுலின் கீழ்க்கண்ட பணிகளை செய்கிறது

செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை அதிகரிக்கிறது (Increases Glucose Uptake) சில வகை செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் தேவையில்லை. இது குறித்து விரிவாக பிறகு பார்க்கலாம். எனவே இரத்தித்தில் போதுமான அளவு இன்சுலின் இல்லை என்றால் குளுக்கோஸ் செல்களுக்குள் செல்லாமல் இரத்தத்திலேயே இருக்கும். இப்படி இரத்தத்தில் அதிகப்படியாக இருக்கும் குளுக்கோஸ் தான் பல வித நோய்களுக்கும் காரணம். இது குறித்தும் பிறகு விரிவாக பார்க்கலாம்
குளுக்கோஸ் உடைவதை அதிகரிக்கிறது Increases Glycolysis
பைருவேட் அசிடைல் கோ ஏ ஆக மாறுவதை அதிகரிக்கிறது Increases conversion of Pyruvate to Acetyl CoA
கைகோஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது Increases Glycogenesis
கைகோஜன் உடைபடுவதை குறைக்கிறது Decreases Glycogenolysis
பிற பொருட்களில் இருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைக்கிறது Decreases Gluconeogenesis
HMP Shunt பாதையை அதிகரிக்கிறது
கொழுப்பு உடைபடுவதை குறைக்கிறது Decrease Lipolysis
கொழுப்பமிழங்கள் உற்பத்தியாவதை அதிகரிக்கிறது Increase Fatty Acid Synthesis
டரைகிளைசரைட் கொழுப்பு அதிகம் உற்பத்தியாகிறது Increases TG Synthesis
கீட்டோஜெனெசிசை குறைக்கிறது Decreases Ketogenesis
அமிலோ அமிலங்கள் செல்களுக்குள் செல்வதை அதிகரிக்கிறது Increase AA uptake
வளர்ச்சி இயக்குநீரின் புரத உயிர்ப்பொருள் கூட்டமைப்பை அதிகரிக்கிறது Protein Anabolic Effect of Growth Hormone (permissive effect)
புரதம் அதிகம் உருவாவதை அதிகரிக்கிறது Increases protein Synthesis
ரிமோசோம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது Regulation of Ribosomal Translation
இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவை குறைக்கிறது Decrease in K and P in Blood
செல்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. செல்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை ஊக்குவிக்கிறது Growth and Cell Replication
Stimulates
-oOo-

இந்த நீண்ட நெடும் பட்டியலில் இருந்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது
இன்சுலினனின் வேலை என்பது இரத்தத்தில் குளுக்கோசை குறைப்பது மட்டும் அல்ல என்று தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா.
இன்சுலினின் முதன்மை நோக்கம் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு (Anabolism) தான்
இன்சுலினின் ஒரு பக்க விளைவு தான் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை குறைப்பது. அது முதன்மை விளைவு கிடையாது

சொல்லப்போனால்

இரத்தத்தில் குளுக்கோசை குறைக்கும் இயக்குநீர்கள் (hormones) மிகக்குறைவே
இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்கள் தான் உடலில் அதிகம்
ஏன், ஏனென்றால்

நமது உடல் மாவு சத்து சாப்பிட ஏதுவானது அல்ல
நமது உடல் புரதம் மற்றும் கொழுப்பு சத்து உண்ண ஏதுவானது
இதனால் தான் இன்சுலின் என்ற ஒற்றை இயக்குநீரின் பிரச்சனை மிகப்பெரிய நோயாகிறது
அதே நேரம் இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்களில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை என்றால் பிற இயக்குநீர்கள் அந்த வேலையை செய்து விடுகின்றன
மனிதனின் பரிணாம வளர்ச்சியில், நாம் மாவுச்சத்து உண்பது மிகவும் சமீபத்தில் தான்

அதாவது விவசாயம் வந்த பிறகு தான்
அதாவது கடந்த 2000 வருடங்களாகத்தான்
-oOo-

இப்படி மாவுச்சத்து உண்ணும் போது என்ன ஆகிறது

இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது
குளுக்கோசை குறைக்க வல்ல ஒரே இயக்குநீர் இன்சுலின் என்பதால் இன்சுலின் மட்டுமே செயல்பவ வேண்டிய நிலை வருகிறது
எனவே, அதை குறைக்க இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது
இப்படியே தினமும் அதிகப்படியாக இன்சுலின் சுரந்தால் என்ன ஆகும்

-oOo-

ஒரு ஊர் உள்ளது
அங்கு ஒரு குளம் உள்ளது

அந்த ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கும் போதுமான நீர் அந்த குளத்தில் இருந்து கிடைக்கும்

அந்த ஊருக்கும் ஒரு கோலா கம்பெனி வந்து போர் போட்டு நீர் எடுத்தால் என்ன ஆகும்

குளம் வற்றி விடும்

-oOo-

 

அதே போல், நாம் மாவுச்சத்து சாப்பிடும் போது

நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது
நிறைய இன்சுலின் சுரக்கிறது
கொஞ்ச நாட்களில் கணையத்தில் இருக்கும் சுரக்கும் சக்தி குறைந்து விடுகிறது
அப்படி குறையும் போது, முதலில் கணையத்தின் சுரக்கும் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் சாப்பபிடுகிறார்கள்
பிறகு

அதுவும் செல்லுபடியாகாமல் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை வருகிறது
-oOo-

குளம் வற்றினால், லாரியில் நீர் கொண்டு வர வேண்டுமே, அது போல்

-oOo-

நாம் மாவுச்சத்து சாப்பிடாவிட்டால்
நமக்கு தேவையான இன்சுலின் அளவு குறைவே
எனவே
கணையம் களைப்படையாமல் செயல்படுகிறது

-oOo-

ஒவ்வொரு ஊரின் குளமும் வெவ்வேறாக இருக்கும்

சில ஊர் குளங்களில் இருந்து 50 குடும்பங்களுக்கு மட்டுமே நீர் எடுக்க முடியும்
சில குளங்களில் இருந்து 100 குடும்பங்களுக்கு கூட எடுக்கலாம்
சில குளங்களில் ஊற்று நன்றாக இருந்தால் கோலா கம்பெனிக்கு கூட நீர் எடுக்கலாம்
-oOo-

ஒவ்வொருவருக்கும் கணையத்தின் செயல்பாடு மாறுபடும்

சிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டாலே, அவர்களின் கணையத்தால் ஈடு கொடுக்க முடியாது
சிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டால், அவர்களின் கணையம் சமாளிக்கும், அதிகம் சாப்பிட்டால் மட்டுமே பிரச்சனை
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் கணையம் சுரந்து கொண்டே இருக்கும்
-oOo-

இதில்

முதல் வகை தான் நீரிழிவு நோய். சரியாக சொல்லவேண்டுமென்றால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 DM)
இரண்டாவது வகை நிரிழிவிற்கு முன் நிலை. அதாவது Pre Diabetes or Impaired Glucose Tolerance என்கிறோம்
மூன்றாவது வகையினர் எவ்வளவு மாவுச்சத்து சாப்பிட்டாலும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் நீரிழிவு நோய் வருவதில்லை
-oOo-

நீரிழிவு நோய் நிலைகள்
நீரிழிவு நோய் நிலைகள்

3-ponds-paleo
அப்படி என்றால் முதலாம் வகை நீரிழிவு நோய் என்றால் என்ன

குளத்தில் நீரை அதிகப்படியாக எடுத்து விட்டால் நீர் வற்றி விடும்
இது இரண்டாம் வகை நீரிழிவு நோய் Type 2 DM
ஒரு போர் நடந்து, நம்நாட்டு வீரர்களும், எதிர் நாட்டு வீரர்களும் குளத்தில் இருந்து சண்டை போட்டால், அதன் பிறகு குளத்தில் நீரை எடுக்க முடியாதல்லவா. இது முதல் வகை நீரிழிவு நோய் Type 1 DM
அவ்வளவு தான் !

https://www.facebook.com/722399827

Source : http://www.chennaipaleodoctor.com/

Follow us on Social Media