பேலியோவில் ஏன் இந்துப்பு பயன் படுத்துகிறோம்?

பேலியோவில் ஏன் இந்துப்பு பயன் படுத்துகிறோம்?
இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இந்துப்பு- இந்த உப்பும் சோடியம் குளோரைடு தான். ஆனால் நாம் தற்போது பயன் படுத்தும் உப்பில் அதிக அளவு சோடியம் மற்றும் அயோடின் கலந்துள்ளது.
சாதரணமாக நமது மருத்துவர் ரத்த அழுத்தம் உடையவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரையும் உப்பு குறைவாக பயன்படுத்த சொல்வதன் காரணம் நாம் இப்போது பயன்படுத்தும் உப்பில் கலந்து இருக்கும் பொருட்களை தவிர்க்கத்தான்.
அயோடின் குறைபாட்டுக்காக உப்பில் சேர்க்கப்பட்ட அயோடின் இப்போது மிக அதிகமாக சேர்க்கப்படுவதால் தீமைகளே அதிகம் விளைகின்றன.

இந்துப்பு என்பது பாறை உப்பு

வெட்டி எடுத்து வந்த உப்பு பாறை கற்களை சிறு பொடி கற்களாக உடைத்து இளநீா்.. பழங்காடி (வினிகர்).. பின் சுத்த நீர் ஒவ்வொன்றிலும் சில மணி நேரம் ஊற வைத்து.. பின் காய வைத்து நன்கு உலர்ததும் இதை 110 டிகிரி வெப்பத்தில் வறுக்கும் போது இந்த உப்பு கற்கள் வெடிக்கிறது.. அப்படி வெடித்ததை நன்றாக அரைத்து சல்லடையில் சலித்து மாவு போல ஆனதும் விற்பனை செய்யப்படுகிறது.

பயன்கள்

சர்க்கரை நோய் காரணமாக நாக்கில் தோன்றும் ருசியின்மையில் இருந்து விடுதலை
ஜீரணத்துக்கு உதவி செய்கிறது
வியர்வை சுரப்பிகளுக்கு உதவி செய்கிறது
மலச்சிக்கல் தீர உதவி செய்கிறது
ரத்த அழுத்தம், நீரிழிவு கட்டுப்பாடு

Follow us on Social Media