பேலியோ அசைவம் – ராதிகா ஆனந்தன்

1) தலைக்கறி பாகற்காய் குழம்பு / தொக்கு

2) மூளை முள்ளங்கி மிளகு வறுவல்

250கி கறி, 25கி பாகற்காய் குழம்பிற்கு போதுமானது.
ஒரு ஆட்டின் மூளை , 1 – 2 தேக்கரண்டி முள்ளங்கித் துருவல் பொரியலுக்கு போதுமானது.

1) பாகற்காயை மெல்லிய வட்டமாக அரிந்து சிறிது உப்பு சீரகத்தூள் மஞ்சள்தூள் பிசறி தோசைக்கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு காயை சேர்த்து மூடிப் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்..

விழுது – இஞ்சி பூண்டு சீரகம் சோம்பு தக்காளி 2 சின்ன வெங்காயம் 2 .. அனைத்தையும் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வதக்கி ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.. 2 தக்காளிக்கு பதிலாக 1 சிறு தக்காளி, 1 சிறு நெல்லிக்காய் சேர்க்கலாம்..

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் , கறவேப்பிலை,
மஞ்சள் தூள் பிரட்டி அலசிய தலைக்கறியை வதக்கி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.. உப்பு மிளகாய்தூள் 2 ஸ்பூன்
( அவரவர் தேவைக்கு கூட்டிக் கொள்ளலாம்) , மல்லித்தூள் முக்கால் ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.. தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு கறியை நன்றாக வேகவிடவும். வெந்து வற்றி வரும்போது கொத்தமல்லி இலை, வறுத்த பாகற்காய் சேர்த்து பிரட்டி உடனே மூடிப்போடவும் பாகற்காயை அதிகமாக குழம்புடன் கொதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவும்..

2) மூளையை அலசி கொதிக்கும்
தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெந்ததும் துண்டு துண்டாக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம் 10 பொடியாக நறுக்கிக்கொள்ளவும் , வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், காய்ந்த சிகப்பு மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கி ,
உப்பு, மஞ்சள்தூள் சிறிது, வீட்டில் அரைத்த கரம் மசாலா அல்லது சீரகத்தூள் சிறிது, மல்லித்தூள் சிறிது, மிளகுத்தூள் சிறிது சேர்த்து வதக்கி துருவிய முள்ளங்கி போட்டு மூடி சிவந்து வதங்கியதும்
மூளையை போட்டு கிளறவும்.. தண்ணீர் ஊற்றாமல் மிதமான தீயில் செய்ய வேண்டும்.. முள்ளங்கி பதிலாக தேங்காய் துருவல் கடைசியாக சேர்த்துக் கொள்ளலாம்.. கொத்தமல்லி இலை, எலுமிச்சைச் சாறு கலந்து பறிமாரவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001736941825

Follow us on Social Media