பேலியோ இட்லி – ரிஷி ரவீந்திரன்

தேவையான பொருட்கள்:

– ஆளிவிதை மாவு (Flax seed flour)
– பாதாம் மாவு
– வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி
– நெய்
– உப்பு

செய்முறை:

என்னைப் போன்ற ஏழைகளுக்கு இட்லிக் கொப்பரை வாங்குவது அதிக செலவாகின்றபடியால் அதற்குப் பதிலாக ஒரு டாலரில் கிடைக்கும் Egg Pouchஐக் கொண்டு மைக்ரோவேவில் இட்லி சமைப்பதால் அதே பாணியில் செய்திருக்கின்றேன். வீட்டில் இட்லி கொப்பரையிலேயே நீங்கள் தயாரிக்கலாம்.

– ப்ளாக் சீட் மாவு,் பாதம் மாவினை் ஒரு பெளலில் கலக்கவும்.
– கொஞ்சம் உப்பு, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி அதனுடன் தாராளமாக நெய் சேர்த்து கொஞ்சம் நீர் சேர்த்து மாவு பதத்தில் கரைக்கவும்.
– இப்பொழுது இட்லித் தட்டில் நெய் தடவி அதில் மாவினை இட்டு நீராவியில் இட்லி அவிப்பது போல் அவிக்கவும்,

எனக்கு மைக்ரோவேவ் ஓவனில் 4 நிமிடங்களில் நல்ல இட்லி கிடைக்கின்றது.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media