பேலியோ காய்கறி பன்னீர் அவியல் – ராதிகா ஆனந்தன்

காய்கறிகளில் பேலியோ காய்கறிகள் 400 கி கலவையாக எடுத்து கொஞ்சம் கனமாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நான் உபயோகித்தது நூல்கோல், வெள்ளரிக்காய், சுரைக்காய், கேரட், கத்திரிக்காய், முருங்கைக்காய்.
குக்கரில் நறுக்கிய காய்கறிகளுடன் மஞ்சள் தூள் , கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து 1 விசில் வருவதற்குள் இறக்கிக் கொள்ளவும். முக்கால் பதம் வெந்தால் போதும். தண்ணீர் இல்லாமல அடுப்பை சிம்மில் வைத்து வற்ற வைக்வும்.

மிக்ஸியில் 2 சில்லு தேங்காய், 3 பச்சை மிளகாய், அரை ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை 2 அதிமாக தண்ணீர் ஊற்றாமல் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேக வைத்த காய்கறி கலவையில் கொட்டி உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.

அதே சமயம் இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பன்னீரை 200 கி போட்டு 1 நிமிடம் பிரட்டினால் போதும். பின் காய்கறி கலவையில் கலக்கவும்.

2 நிமிடம் ஆனவுடன் 2 ஸ்பூன் நன்கு அடித்த தயிரை காய்கறி கலவையில்
கலக்கவும். தயிர் கலந்தவுடன் கொதிக்க விடாமல் 1 நிமிடத்தில் இறக்கி விடவும். இறக்கும் முன் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.

டிப்ஸ்: அவியல் செய்ய அடுப்பை சிம்மில் வைத்து சமைப்பது சுவையைக் கூட்டும். காய்கறிகள் அதிகம் வேகாமல், குலைந்துப் போகாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.. சுவையும் கூடும்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media