பேலியோ கேக் – ராதிகா ஆனந்தன்

தேங்காய் பொடி, பாதாம் பொடி, ஆளிவிதை சேர்க்காதது.

முட்டை 3
உருக்கிய வெண்ணெய் 80கி
கொக்கோ பவுடர் – 30கி
க்ரீம் சீஸ் – 60கி
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்

ஃரோஸ்டிங் / கேக்கின் மேல்பரப்பில் பூசுவதற்கு:

உருக்காத வெண்ணெய் , க்ரீம் சீஸ் சம அளவு
வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்

முதலில் கேக் செய்வதற்கான க்ரீம் சீஸ் செய்ய முழுக் கொழுப்புடன் சம அளவு க்ரீம் ( 500 மிலி பாலுக்கு 500 மிலி க்ரீம்) எடுத்து கொதிக்க வைத்து ஒரு லெமன் பிழிந்து திரியவைத்து சுத்தமான துணியில் வடிகட்டி குளிர்ந்த நீரில் பலதடவை முக்கி எடுத்து (சூடு ஆரும்வரை) துணி மூட்டையின் மீது கனமான பாத்திரம் அல்லது மூட்டையை திருகி தண்ணீரை முழுமையாக பிளிந்து கொள்ளலாம்.. தண்ணீர் வெளியேறியதும் மிக்ஸியில் நன்று மையாக அரைத்துக் கொள்ளவும்.. 1 வாரம் முன்னரே க்ரீம் சேகரிக்க ஆரம்பித்து
கேக் செய்யும் நாளுக்கு முன் க்ரீம் சீஸ் செய்து ஃபிரிஜில் வைத்துக்கொள்ளலாம்.. இல்லையென்றால் பெரிய கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். சுலபமாக இருக்கும்.. நான் உபயோகித்தது இயற்கையாகவே முழுக்கொழுப்புடைய எறுமைப்பால்.. இயற்கையிலேயே சிறிது இனிப்பு சுவைக்கொண்டது..

கேக் செய்ய தேவையான அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக கரண்டியில் அடித்துக் கலக்கவும் அல்லது ப்ளென்டரில் போட்டுக்கொள்ளலாம்.. கெட்டியான இட்லி மாவு பதத்திற்கு இருக்கும்.
இப்ப கேக் செய்யும் மோல்டில் வெண்ணெய் அல்லது நெய் தடவி இந்த கலவையை ஊற்றி அவனில் பேக் (350F/ 180C இல் 25 நிமிடம்)
செய்துக் கொள்ளவும் ..

கேக் வேகும் நேரத்தில் ஃப்ரோஸ்டிங்க் செய்ய க்ரீம் சீஸ், வெண்ணெய் சம அளவு, வெனிலா எசன்ஸ் எடுத்து நல்ல மிருதுவான க்ரீம் போல அடித்துக் கொள்ளவும்..

மோல்டில் உள்ள கேக் ஆரியவுடன் ஓரங்களில் கத்தியில் கேக்கின் சுற்றி ஒரு கீறல் போட்டு மோல்டை திருப்பி கேக்கை எடுத்துக் கொள்ளவும்..

முதல் படத்தில் இருப்பதுப் போல
பல அடுக்குகளாக ஏற்கனவே செய்து ஃபிரிஜில் வைத்தும் கொள்ளலாம்.. ஒவ்வொரு அடுக்கின் மேல்புறம் ஃப்ரோஸ்டிங்க் கீரீமை தடவிக் கொள்ளவும்.. கடைசி அடுக்கின் மேலேயும் தடவி சுற்றிலும் தடவிக்கணும்.. இல்லையென்றால் ஒரே அடுக்கு செய்து நான்கு துண்டுகளாக வெட்டியும் ஒவ்வொரு அடுக்கின் மேல் ஃப்ரோஸ்டிங்க் தடவி சுற்றிலும் பூசிக்கனும்..

மேல டார்க் சாக்லேட் துருவல் துருவிக்கொள்ளலாம்.. அவசியம் இல்லை..

100 கி கேக்கில் 1.5 கி கார்ப், 14 கி ஃபேட், 3 கி ப்ரோட்டீன்..

இப்ப கிறிஸ்துமஸ்க்கு கேக்கும் ரெடி.. !!

பின்குறிப்பு –
1)மெயின்டெனன்ஸ் டயட் எடுப்பவர்கள்,
குழந்தைகளுக்காக கேக் செய்யும்போது கேக் மாவிலும் ஃப்ரோஸ்டிங்கிலும் தேவையான அளவு தேன் கலந்து அடித்துக் கொள்ளலாம்

2) என்னிடம் கேக் செய்யும் அவன் இல்லை.. நான் செய்தது எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில்.. நேரடியாக ரைஸ் பேனில் நெய் தடவி கேக் மாவை ஊற்றி 25 நிமிடத்திற்குள் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்தேன்..

3) என் வாழ்க்கையில் முதன்முறையாக செய்த கேக்!!

சமையல் குறிப்பு:

Follow us on Social Media