பேலியோ சமையலுக்கு எந்த ஓவன் சிறந்தது.? சுஹைனா மஜ்ஹர்

மூன்று வித ஓவன்களை நான் பயன்படுத்தி வருவதால் ஒரு சின்ன அலசல்…

14908272_1461453747203249_4326823607623769358_n

முதலில் மைக்ரோவேவ் ஓவன்

என்னிடம் இருப்பது சாம்சங் 3 இன் 1.
microwave, grill, convection

இதில் பேலியோவுக்கு அதிகமா நான் யூஸ் பண்ணுவது convection தான். மைக்ரோவேவ் என்பது உணவை லேசாக கெட்டிப்படுத்தி வேக வைக்கும். சிக்கனெல்லாம் இதில் வைக்க முடியாது. இறுகிப் போய்விடும். சிக்கனோ மட்டனோ மேலே க்ரிஸ்பியாக உள்ளே ஜூஸியாக வர வேண்டுமென்றால் இதில் உள்ள கன்வெக்‌ஷன் ஆப்ஷன் தான் பயன்படுத்த வேண்டும். மற்றபடி வெஜ் செய்ய மைக்ரோவேவ் ஆப்ஷன் நல்லது. அதை கேஸிலும் கூட செய்து விட முடியும்.

கன்வெக்‌ஷன் என்பது Baking Processக்கானது. கேக் பிஸ்கெட் எல்லாம் இதில் தான் செய்ய வேண்டும். நான் ஃபுல் சிக்கன் அப்டியே இதில் வைத்து செய்வேன். டைம் கொஞ்சம் அதிகம் ஆகும். கிட்டத்தட்ட மும்முறை 20 நிமிடங்கள் வைக்க வேண்டி இருக்கும். ஆனா கெட்டியாக மாறாது. காரணம் உள்ளே காற்றோட்டம் இருக்கும். நவீன air fryer இந்த டைப் தான்.

இதில் க்ரில் ஆப்ஷன் கடைசியாக சிக்கனை மொறுமொறுப்பாக மாற்ற உதவும். ஆனா இந்த ஓவனில் இந்த ஆப்ஷன் அத்தனை பிடிக்கல எனக்கு. சோ நான் பயன்படுத்துவது Bajaj OTG தான்.

OTG உண்மைலயே நல்ல சாய்ஸ். அதில் மேலே, கீழே இருபுறமும் ஹீட்டர் இருப்பதை வாங்குவது நல்லது. உள்ளே சுற்றுவது போன்ற டைப்பில் வாங்கினால் அடிக்கடி திருப்பி வைக்க தேவையில்லை. ஆனா முழுக்க முழுக்க க்ரில் மட்டும் செய்தால் லேசாக கெட்டியாகத்தான் செய்கிறது உணவுப்பண்டம். கெட்டியாகாமல் இருக்க நேரத்தை குறைத்தால் வேகாமல் போக வாய்ப்பு இருக்கு. அதனால் பொதுவா நான் கன்வெக்‌ஷனில் கொஞ்ச நேரம் வேக வைத்து பின் க்ரில் செய்வது வழக்கம்.

கடைசியா நான் பேலியோவுக்காக வாங்கியது Smokeless Barbeque Grill. சாதாரண OTG டைப்ல ஓவன் கதவை மூடி வைத்து செய்வோம். இது ஓப்பன் ஓவன். அடியில் தண்ணீர் ஊற்றிடணும். பனீரோ சிக்கனோ கம்பியில் குத்தி வேக வைக்க வேண்டும். சீக்கிரம் வெந்திரும். நான் வெச்சிருக்கும் ஓவன்ல ஹீட்டிங் எலிமெண்ட்டை தனியா கழட்டி எடுத்துக்கலாம். நான் கழட்டி வெச்சிட்டு இதுலயே கரியில் தீமூட்டி சார்க்கோல் பார்பெக்யூவும் செய்வேன்.

மூன்றையும் சமமாக தான் உபயோகிக்கிறேன். செலவு பிரச்சினை இல்லைன்னா 3 இன் 1 வாங்கிக்கலாம். மாடலை பொறுத்து அளவை பொறுத்து சுமார் 10 ஆயிரம் வரும் விலை. இதில் கன்வெக்‌ஷன்ல வைத்து செய்திட்டு மொறுமொறுப்புக்கு கேஸ் அடுப்பு தனலில் வாட்டிக் கொள்ளலாம்.

டைட் பட்ஜெட்னா OTG நல்ல சாய்ஸ். ஹீட்டை குறைத்து வைத்து வெந்த பின் கூட்டி வைத்து சமைக்க வேண்டும். ஸ்மோக்கி ஃப்ளேவர் மட்டும் கிடைக்காது. அதுக்கு ஒரு பாத்திரத்தில் குக் பண்ணிய சிக்கனை வைத்து ஒரே ஒரு அடுப்புக்கரியை தீமூட்டி சின்ன தட்டில் பாத்திரத்துள் வைத்து அதன் மேல் ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் மூடி வைத்து விட்டால் ஓரளவுக்கு அந்த ஃப்ளேவர் கிடைக்கும்.

பயன்படுத்தி பழகிட்டோம்னா ஒன்னு இல்லைன்னாலும் கஷ்டம் தான்…

குறிப்பு :

Follow us on Social Media