பேலியோ சில்லி சிக்கன் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

சிக்கன் – 1/2 கி
வெங்காயம் – 100 கி
தக்காளி (அரைத்தது) – 4
குடைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சிக்கன் மசாலா – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்/
நெய் – தே . அளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
புதினா – தே . அளவு
கொத்தமல்லி இலை – தே . அளவு

#செய்முறை::

* சிக்கனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,இஞ்சி பூண்டுவிழுது 1 ஸ்பூன் ,எலுமிச்சை சாறு,சிக்கன் மசாலா , சிறிது உப்பு சேர்த்து கலந்து கொண்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
*சிறிது எண்ணெயில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
* தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் வெங்காயம்,குடைமிளகாய்,தக்காளி விழுது,
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் ,உப்பு சேர்த்து வதக்கவும், பிறகு வறுத்த சிக்கனையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி புதினா கொத்த மல்லி இலை தூவினால்,

*சுவையான சில்லி சிக்கன் தயார்.

{ குறிப்பு: பன்னீர், காளான் வைத்து இதே முறையில் சமைக்கலாம் }

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100006513832331

Follow us on Social Media