பேலியோ – சுட்ட முட்டை – கோக்கி மகேஷ்

பேலியோ – சுட்ட முட்டை
(ஏர் பிரையரில் செய்தது , ஒவனிலும் செய்யலாம்…)

# தேவையான பொருட்கள்:
1. முட்டை – 2 to 4
2. துருவிய பால் ஆடை கட்டி (சீஸ் – செட்டார் (அ) வேறு வகையான கட்டி சீஸ் )
3. உப்பு – – தே . அளவு (சீஸீல் உப்பு இருந்தால் அதிகம் உப்பு தேவை இல்லை)
4. வெண்ணெய் – தே. அளவு

செய்முறை:
• முட்டையின் வெள்ளை கருவை தனியாக பிரித்து அடித்து வைத்து கொள்ளவும்.

• மஞ்சள் கருவை படம் மூன்றில் உள்ளது போல முட்டை ஓட்டிலே வைத்து கொள்ளவும்.

• ஒரு பேக்கிங் தட்டில் வெண்ணெய் தடவி அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை ஊற்றவும்.

• அதனுடன் துருவிய பால் ஆடை கட்டியை சேர்க்கவும். (படம் 1)

• இக்கலவையை முன்னரே சூடு செய்த ஏர் பிரைய ர் (அ) ஒவனில் 3 நிமிடம் வைக்கவும். படம் 2 ல் உள்ளதை போல இருக்கும்.

• பிறகு மஞ்சள் கருவை அதன் மேல் முடிந்த அளவிற்கு உடையாமல் நான்கு மூலைகளில் வைத்து மறுபடியும் 3 நிமிடம் ஏர் பிரைய ர் (அ) ஒவனில் வைக்கவும்.

• படம் நான்கை போல அடிப்பகுதி மெதுவாகவும் மேல்பகுதி மொருமொருப்பாகவும் உள்ள வித்யாசமான சுட்ட முட்டை தயார்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001566668586

Follow us on Social Media