பேலியோ சைவம் தக்காளித் தொக்கு – உமா தாரணி

புளி, வெல்லம் இல்லாமல் தொக்கு செய்வது என்பது இயலாத ஒன்றாக இருந்தது, எதையுமே முடியாது என்பதை விட முயலும் போது எளிமையாகிவிடுகிறது.

தக்காளித் தொக்கு :

தே. பொருட்கள்:

தக்காளி : 1 கிலோ (பெங்களூர்
தக்காளி பாதி, நாட்டுத் தக்காளி பாதி)
காமிளகாய்: காரத்திற்கேற்ப

ந. எண்ணெய் : 100 மில்லி

பெ .காயம்: 1 டீஸ்பூன்

ம.பொடி : 1 டீஸ்பூன்

கடுகு : 1 டீஸ்பூன்

க.வேபிலை : சிறிதளவு

வறுத்து அரைத்த வெந்தயப் பொடி : அரை டீஸ்பூன்

உப்பு : தே. அளவு

செய்முறை:

1. தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.

2. கடாயில் சிறிது ந. எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், தக்காளி, மற்றும் காய்ந்த மிளகாய்களைப் போட்டு நன்றாக நீர் வற்றும் வரை வதக்கவும்.

3 ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து பின் பெ. காயம் , க.வேற்பிலை சேர்க்கவும்.

5 .அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும், ம.பொடி, உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

6. அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும், இறக்கியவுடன் வெ. பொடி சேர்க்கவும்.

ஒரு மாதம் வரை கெடாது, பிரிட்ஜில் .வைத்து உபயோகப் படுத்தலாம்.

பன்னீர், மற்றும் காலிப் பிளவர் தயிர் சாதம் , கத்தரிக்காய் வறுவல், ஸ்டப் புடு தக்காளி, குடைமிளகாய், பாகற்காய், புடலங்காய் எல்லாவற்றிற்கும் சரியாகப் பொருந்திப் போகும்.

சமையல் செய்ய இயலாத நாட்களில் தவாவில் பன்னீரை இலேசாக வாட்டி தொக்கு சேர்த்து சாப்பிடலாம் .

எல்லாவித பன்னீர் கிரேவி செய்யும் போது ஒரு ஸ்பூன் போடலாம்.

சீஸ் ஸ்லைஸ் நடுவில் வைத்து உண்ணலாம்.

All purpose தொக்கு ரெடி.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media