பேலியோ நானே கேள்வி நானே பதில் – 2

இனிப்பு சாப்பிடாமல் என்னால் தூங்க முடியாது இரவில். பேலியோ இனிப்புகள் உண்டா ?

பேலியோ என்ற புதிய வாழ்க்கை முறைக்கு வந்த பிறகு உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றித்தான் ஆகவேண்டும். அதே நேரம் 100 சதவீத கோக்கோ பவுடரையும், துருவி காய்ந்த தேங்காயையும் பிசைந்து உருண்டை பிடித்து பாருங்களேன். அது பேலியோ இனிப்பு தான். மேலும் தகவல்களுக்கு ஆரோக்கிய உணவுகள் குழுவுக்கு வரவும்.

பேலியோவில் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே ?

எல்.டி.எல் என்பது கொழுப்பு அல்ல. புரதம். எல்.டி.எல் உருவாகும்போது தவறாக உருவாவதில்லை. கொழுப்பு உணவு நீங்கள் அதிகம் எடுக்காததால் சின்னதாக உருவாகிறது, அதனால் ரத்தநாளங்களில் சிக்கி அதன்மேல் ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் பட்டு கெட்டுப்போகிறது. கொழுப்பு உணவு அதிகம் எடுத்தால் பெரிய சைஸ் எல்.டி.எல் ஆக உருவாகி இதயத்துக்கு இதமளிக்கும். சின்ன சைஸ் எல்.டி.எல் – நம்பியார் வீட்டில் வளர்ந்த எம்.ஜியார். (நார்மல் உணவில்). பெரிய சைஸ் எல்.டி.எல் – லட்சுமி பாய் வீட்டில் வளர்ந்த எம்.ஜி.யார். (பேலியோ உணவில்). இயல்பிலேயே நல்லவர்.

அதிக கொழுப்பு உணவும், அதிக கார்ப் (மாவுச்சத்து) உணவும் சாப்பிட்டால் என்ன ஆகும் ?

திடீர் என ஒரு விபத்து நேரும்போது காரில் ஆக்ஸிலேட்டரையும் பிரேக்கையும் சேர்த்து அழுத்தினால் என்ன ஆகுமோ அது ஆகும். மாவுச்சத்தில் இருந்து கையை எடுத்துவிட்டு, கொழுப்பில் உங்களால் முடிந்த அளவு கை வைக்கவும். விபத்தை தடுக்கமுடியும். ஆரோக்கிய வாழ்க்கை பயணம் இனிமையாக தொடரும்.

சிகரெட்டில் தான் கார்ப் (மாவுச்சத்து) இல்லையே ? சிகரெட் பிடித்துக்கொள்ளலாமா ?

இல்லை. சிகரெட் பிடித்துக்கொண்டே பேலியோ தொடர்ந்த ஒரு தோழரின் Hb1AC அளவுகள், சிகரெட் பிடிக்காதபோது மேலும் குறைந்தது. ஆக சிகரெட் தவறு.

பேலியோ வாழ்க்கை முறை = நன்று.
பேலியோ + சிகரெட் = தவறு.
பேலியோ + சிகரெட் + மது = மிகவும் தவறு.

பேலியோவில் மன ரீதியான பிரச்சனைகள் எழுமா ? எழுந்தால் எப்படி தவிர்ப்பது ?

எந்த புதிய முயற்சியிலும் உளவியல் ரீதியான சோதனைகளுக்கு தயாராகவே இருக்கவேண்டும். (உதா: புதிதாக வேலையில் சேர்ந்து இனிமேல் காலை 5 மணிக்கே எழுந்திரிக்க வேண்டும், டிரெயின் பிடிக்கவேண்டும்). நீங்கள் ஏற்கனவே எட்டுமணி வரை தூங்கிய ஆசாமி எனில் இது ஒரு மிகப்பெரிய சோதனையே. கண் வலிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் எரிந்து விழுவீர்கள். இது போன்ற மாற்றங்களை சமாளிக்க உங்களுக்கு தேவை மன உறுதி மட்டும் தான். அத்துடன் சிறிய சிறிய லைப் ஸ்டைல் மாற்றங்கள். போக வேண்டிய இடங்களுக்கு 30 நிமிடம் முன்பே போய் விடுங்கள். இசை கேளுங்கள். சமையல் செய்யுங்கள். குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். நல்ல நண்பர்களிடம் மனம் விட்டு பேசி மகிழுங்கள்.

பேலியோ டயட் ஆரம்பித்ததில் இருந்து தலை வலி, உடல் வலி, ஜுரம், வயிற்றுப்போக்கு. தொடரலாமா ?

பேலியோ டயட்டில் சோதனையான காலகட்டம் முதல் வாரம் தான். அதை கடந்து தான் நாங்கள் எல்லாரும் வந்தோம். இந்த கார்ப் ப்ளூ எல்லாம் போக போக சரியாகிவிடும்.

ஆண்களை விட பெண்களுக்கு எடை இழப்பு குறைவாக இருக்கிறதே ஏன் ?

ஆண்கள், பெண்கள் இருவரின் உடற்கூறியல், ஹார்மோன்கள் எல்லாம் வித்யாசமானவை. பெண்களுக்கு எடை இழப்பு மெதுவாக நிகழும்.

நோ. பேலியோவில் வன்முறை கூடாது. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் கருமமே கண்ணாக பேலியோ தொடரவும். கிண்டல்கள், எள்ளல்கள், கேலிகள் பொருட்படுத்தவேண்டாம். உங்களுக்கு கிடைக்கும் உடல் ரீதியான தீர்வுகளை கண்ணால் கண்டு அந்த விக்கெட் தன்னாலே விழும். நாம் தேடி அலைவதால் தான் தங்கத்துக்கு இவ்வளவு மதிப்பு. தெருவுக்கு தெரு தங்கம் கிடைத்தால் அதனை நாம் கழுத்தில் காதில் போட்டுக்கொள்வோமா ? Let them hit the Gold.

Follow us on Social Media