பேலியோ – நானே கேள்வி நானே பதில் – 3

நானே கேள்வி நானே பதில் – 3
=====================

கெபிர் கெபிர் அப்படீன்னு சொல்கிறீர்களே அது என்ன ?

கெபிர் என்பது நம் குழுமத்தில் வலியுறுத்தப்படும் ப்ரோபயாட்டிக் தயிர். உங்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பெருக இது வழிவகை செய்யும். உணவை நொதித்து சக்தியை கிரகிப்பது இதன் பணி. ஆண்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்தால் இந்த கெபிர் பாக்டீரியாக்கள் கூண்டோடு காலியாகிவிடும். பல்வேறு வயிறு சம்பந்தமான நோய்களுக்கு இந்த நல்ல பாக்டீரியா உங்களிடம் இருந்து அழிந்துவிடுவதே காரணம். இந்த கெபிரை கெபிர் கிரெயின் என்று சொல்வது எதனால் என்றால் இது சின்ன சின்னதாக திரிந்த பால் போல / சீஸ் கட்டி போல இருப்பதாலேயே. கண்ணாடி பாத்திரத்தில் தயிர் உறை ஊற்றுவது போல பாலுடன் சேர்த்து ஊற்றி வைத்தால் பல்கிப்பெருகும். வடிகட்டி தயிர் எடுத்துவிட்டு பார்த்தால் மீதி வளர்ந்து நிற்கும். வளர வளர உற்றார் உறவினர் அக்கம் பக்கத்தவர் நன்பர்களுக்கு கொடுப்பது மேலை நாடுகளில் வழக்கம். இது வளர நாம் எந்த உழைப்பையும் செலுத்த தேவை இல்லை. ப்ரிஜ்ஜில் வைத்திருந்தால் போதும். இந்த கெபிரை சேவை நோக்கத்தோடு இயங்கும் நம் குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது வழக்கம். (முக்கிய விஷயம் – கண்ணாடி பாத்திரம், மர கரண்டி, நைலான் வடிகட்டி போன்றவற்றை மட்டும் உபயோகப்படுத்தவும்). முதலில் எடுக்கப்படும் கெபிர் கொஞ்சம் “கப்” அடித்தாலும் இரண்டாவது முறை, மூன்றாவது முறை எடுக்கப்படும் கெபிர் சுவை அமோஹம். நான் எங்கள் ஊரில் கெபிர் தயிராகவே வாங்குகிறேன். நம் ஊரிலும் பால் கெபிர் தயிரை ஒரு நிறுவனம் விற்கிறது, பேலியோ சந்தையில் விசாரிக்கவும்.

பேலியோ எடுப்பவர்கள் சாகாவரம் பெற்றவர்களா ?

இல்லை. கார்ப் எடுப்பவர்கள் லைசென்ஸ் கூட எடுக்காமல் லாரியை ஓட்டும் க்ளீனர் போன்றவர்கள். எப்போது யாரை அடித்து தூக்குவார்கள் என்று தெரியாது. பேலியோ எடுப்பவர்கள் பயணம் காதோரம் நரைத்த முப்பது ஆண்டுகள் ஓட்டுனராக பணியாற்றிய எக்ஸ்பீரியன்ஸ் டிரைவரிடம் உள்ள லெக்ஸஸ் கார் பயணம் போன்றது. ஸ்மூத், ஸ்டடி, ரிலாக்ஸ், டிரைவருக்கும் நமக்கும் சேர்த்தே வழிந்தோடும் இனிய இசை.

எங்க தாத்தா 100 வருடம் வாழ்ந்தார். அவர் சாதாரண உணவை தான் எடுத்தார். எங்களை போல சாதாரண உணவை எடுப்பவர்களை என்ன சொல்வீர்கள் ?

நியாண்டர் செல்வன் சொன்னது தான். சாதாராண உணவை எடுப்பது பாம்பு புத்துக்குள் கையை விடுவது மாதிரி தான். பாம்பு இருந்தால் கடிக்கும். பாம்பு நாகினி சீரியல் ஷூட்டிங் போயிருந்தால் கடிக்காது.

பேலியோவில் யாருக்கும் எந்த வியாதியும் வராதா ? கேன்ஸர் வராதா ? கேன்ஸர் இருந்தால் குணமாகுமா ?

பெரும்பாலும் தடுத்துவிடலாம் என்பதே நிலை. நான் ஏன் நைட்டு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போறேன் என்பது போல பல வகை வியாதிகள் உங்களை அண்டாத நிலை பேலியோ டயட்டில் ஏற்படும். கேன்ஸர் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நீங்களே கேன்ஸர் தான். கேன்ஸர் என்பதே ஒரு செல் பல செல் ஆக பெருகுவது தானே ? உலகில் உயிரினம் உண்டானபோது அமீபாவாக – ஒற்றை செல் உயிராக இருந்த நீங்கள் – பல செல் உயிராக மாறியதால் தான் நீங்கள் இன்றைக்கு ஒரு மனிதனாக உருமாறி இருக்கிறீர்கள். ஆகவே நாம் எல்லாருமே கேன்ஸர் தான். ஒரு கெட்டுப்போன செல் மேலும் மேலும் பல்கிப்பெருகும் இந்த வியாதி எல்லார் உடலிலும் வர வாய்ப்பு உண்டு. இதன் காரணிகளான சிகரெட், ஸ்டிரெஸ், ஆங்ஸைட்டி, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, செய்யும் வேலை, உண்ணும் உணவு என பல காரணங்கள். ஆனால் கேன்ஸர் செல்லுக்கு உணவான சர்க்கரை சத்தை நாம் பேலியோ டயட்டில் தவிர்ப்பதால் கேன்ஸர் வந்தாலும் அது பெருமளவு மட்டுப்படும். பேலியோ டயட் என்பது கேன்ஸருக்கு கீமோதெரபி போல பயன் அளிக்கும்.

எனக்கு பேலியோ டயட் பாலோ செய்ய விருப்பம் இல்லை. வேறு எதாவது உருப்படியாக இந்த குழுவின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமா ?

முடியும். பேலியோ டயட் மட்டும் அல்ல. பொதுவாகவே பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். குப்பை உணவு தவிர்க்கவும். ரீபைண்ட் ஆயில் தவிர்க்கவும். வைட்டமின் டி குறைபாட்டுக்கு வெய்யிலில் நிற்கவும். ஒமேகா 3 சப்ளிமெண்ட் எடுக்கவும், சைவர்கள் வைட்டமின் பி12 அளவை சோதித்து சப்ளிமெண்ட் எடுக்கவும், மது புகை தவிர்க்கவும், யோகா மெடிட்டேஷன் செய்யவும், நல்ல இசை கேட்கவும் என ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கிய உங்கள் பயணம் சிறப்பாக இருக்க பல விஷயங்களை வலியுறுத்துகிறோமே ? இதெல்லாம் பேலியோ டயட்டே கிடையாது.

நீங்கள் வாங்க சொல்லும் சப்ளிமெண்ட்கள், உணவு முறை பாக்கெட்டை கடிக்கிறதே சில சமயம் ?

நீண்ட கால அடிப்படையில், ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மருத்துவமனையில் கொட்டுவதை விட, ஆரோக்கிய வாழ்க்கை பயணத்துக்கு கார் வாங்க இ.எம்.ஐ கட்டுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். சொல்லப்போனால், பேலியோ டயட் சிலபேருக்கு சாதாராண உணவை விட குறைவாகவே செலவு ஆவதாக சொல்கிறார்கள்.

குழுவில் தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே ? ஆஸ்பத்திரிக்கு வந்தது போல எங்கு பார்த்தாலும் ஒரே ரிப்போர்ட் மயம்.

குழுவின் இணைய தளம் ரிலீஸ் ஆகும்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழிவில் சர்ச் பட்டன் உபயோகப்படுத்தி குத்துமதிப்பாக வியாதிகளின் பெயரை வைத்து தேடுங்கள். பிசிஓடி, கொழுப்பு கட்டிகள், கேன்ஸர், உடல் பருமன் என.

இனிப்பு சாப்பிடுவதை விட முடியவில்லை. பேலியோ டயட் என வீட்டில் சொல்லிவிட்டு, நைஸாக ஆபீஸ் போகும் வழியில் வண்டியை நிறுத்தி ரெண்டு கேக் சாப்பிட்டேன். இதை தவிர்ப்பது எப்படி ?

மது, சிகரெட் போல நீங்கள் ஒரு சர்க்கரைக்கு அடிமை. இது இலை முழுக்க பேலியோ உணவு வைத்து (வாரம் முழுக்க பேலியோ), நடுவில் முறம் சோத்தை போட்டு படி குழம்பை ஊற்றியது போல. மொத்தமும் கெட்டுப்போகும். ஆகவே சர்க்கரையிடம் அடிமையாக இருப்பதை விட்டுவிட்டு, மகேந்திரபுரி தீவில் இருந்து எம்.ஜியார் கருப்பு பெயிண்ட் அடித்த சக நடிகர்களுடன் தப்பிப்பது போல தப்பியுங்கள்.

Follow us on Social Media