பேலியோ – நானே கேள்வி நானே பதில் – 1

பேலியோவில் தானியம் தானே வேண்டாம் ? ஸ்ப்ரவுட்ஸ் சாப்பிடலாமா ?

இல்லை. ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளைகட்டிய பயிறு வகைகளும் வேண்டாம்.

நான் பட்டர் காபி / பட்டர் டீ குடிப்பதில்லை. நார்மல் காபி – டீ சுகர் இல்லாமல் குடிக்கலாமா ? ஒரு நாளைக்கு எவ்வளவு ? சுகர் மாத்திரை – ஸ்டீவியா போட்டுக்கலாமா (Artificial sweetener) ?

ஒரு நாளைக்கு ஒரு கருப்பு காபி குடிங்க. ரொம்ப தவித்தால் சுகர் இல்லாமல் ஒரு டீ குடிச்சுக்கலாம். சுகர் மாத்திரை / ஸ்டீவியா வேண்டாம்.

நான் அசைவம் பாதாம் சாப்பிடுவதில்லை, நிறுத்திவிட்டேன். ஓக்கேவா ?

அசைவர்கள் பாதாம் சாப்பிட தேவை இல்லை என்று சொன்னது பாதாமின் மக்னீசியம் அளவுகள் அசைவ உணவு மூலமே கிடைத்துவிடுவதால் தான். ஆனால் பாதாம் மிக அற்புத உணவு. அசைவர்களும் வாரம் இரண்டு முறை ஒரு மீல் ஆக பாதாம் எடுங்கள். தவறில்லை.

உணவில் புரோட்டீன் அளவுகள் எவ்வளவு இருக்கவேண்டும் ? ஜிம் போகிறேன் ப்ரோட்டீன் பவுடர் எடுக்கலாமா ?

உங்கள் எடை 70 கிலோ என்றால் 140 கிராம் வரை தினமும் எடுக்கலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. நம் உணவு உயர் கொழுப்பு, குறை மாவுச்சத்து தான். அதனால் ப்ரோட்டீன் மாடரேட் அளவுகளில் எடுத்தால் போதும். ப்ரோட்டீன் பவுடர் வேண்டாம், அதற்கு பதில் உணவின் மூலமே தினப்படி ப்ரோட்டீன் அளவை அடைய பாருங்கள்.

இரண்டு மாதம் பேலியோவில் இருந்துவிட்டு – எடை குறைத்துவிட்டு – சர்க்கரை அளவுகளை குறைத்துவிட்டு மறுபடி சாதாரண உணவுக்கு மாறிக்கொள்ளலாமா ?

கூடாது. மீண்டும் மாவுச்சத்தை அதிகரித்து சாப்பிட்டால் எடை ஏறும், சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். சாதாரண உணவில் வரும் அத்தனை வியாதிகளும் அண்டும்.

சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டேயாகவேண்டுமா ? எவ்வளவு காலம் சாப்பிடவேடும் ?

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஒமேகா 3 மிக முக்கியம். சிறப்பாக செயல்பட்டு டிரைகிளிசரைடு அளவுகளை குறைக்கிறது. தொடர்ந்து சாப்பிடவேண்டும். வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு டி3 சப்ளிமெண்ட் மிக முக்கியம். உங்கள் டயட் சார்ட்டில் பரிந்துரைக்கப்படும் சப்ளிமெண்ட்கள் உண்ணவும். மீண்டும் எடுக்கப்படும் ரிப்போட்டில் வைட்டமின் டி குறைபாடு இல்லை என்றால் வைட்டமின் டி3 நிறுத்திக்கொள்ளலாம். (சூரிய வெப்பத்தில் நிற்பதை விடவேண்டாம்). இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இரும்பு சட்டியில் சமைப்பதோடு இரும்பு சத்துக்கான சப்ளிமெண்ட் எடுக்கலாம். குறைபாடு நீங்கியது ரிப்போட்டில் தெரிந்தால் நிறுத்தலாம். முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் பயோடின் சப்ளிமெண்ட் எடுக்கலாம். முடிகொட்டுவது நின்று முடி வளர்ந்துவிட்டால் நிறுத்திக்கொள்ளலாம்.

நான் ஏற்கனவே ஒல்லியாக இருக்கிறேன், பேலியோ டயட்டில் என் எடை மேலும் குறைந்துவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் பயப்படுவார்கள். என்ன செய்வது ?

முதல் வாரத்தில் அதிக எடை குறையும். அதன் பின் எடை குறைப்பு மட்டுப்படும். பிறகு ஒரு கட்டத்தில் மொத்தமாக நின்றுவிடும். கவலை வேண்டாம். நான் 78 கிலோவில் இருந்து 71 வந்தேன். அதன் பின் எடை இறங்கவேயில்லை. மேற்கொண்டு எடை இழக்கவேண்டாம் என்று பயம் இருந்தால் தினமும் ஒரு அவித்த உருளை கிழங்கு சாப்பிட்டால் போதும், எடை இறங்காது.

ஏன் பேலியோவில் வேர்க்கடலை கூடாது ? அது நட்ஸ் தானே ?

முதலில் வேர்க்கடலை, நிலக்கடலை, மல்லாக்கொட்டை (மணிலா கொட்டை) என்று நாம் அழைப்பது நட்ஸ் வகையே அல்ல. அது லெக்யூம் வகை. சர்க்கரை சத்து இல்லை என்றாலும் இதில் அப்லாடாக்ஸின் (aflatoxin) என்ற கேன்ஸரை வரவழைக்கும் அமிலம் இருக்கிறது. ஆகவே தவிர்த்துவிடவும்.

பேலியோவில் ஏன் முந்திரிப்பருப்பு வேண்டாம் ? அதிலும் நிறைய சத்துக்கள் உண்டே ?

முந்திரி பருப்பு வேண்டாம். அதில் அதிக கார்ப் அதிகம் இருப்பதால் (100 சதவீதத்தில் 30 சதவீதம்) தவிர்க்க சொல்கிறோம்.

குழந்தைகள் / இளையோர் / வாலிபர்களுக்கு பேலியோ கொடுக்கலாமா ?

கொடுக்கலாம். இனிப்புகள் (சாக்லேட் / லட்டு – ஜாங்கிரி), குப்பை உணவுகள் (சிப்ஸ் வகையறா), கார்பனேட்டட் குளிர்பானங்கள், துரித உணவுகள் (நூடுல்ஸ் வகையறா), வெளிநாட்டு உணவுகள் (பிட்ஸா, பர்கர்), ரீபைண்ட் எண்ணையில் பொரித்த உணவுகள் தவிர்த்தாலே அவர்களை ஆரோக்கிய வாழ்க்கை பயண வாகனத்துக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தினம் காலையில் ஒரு முட்டை கொடுக்கலாம். உடற்பயிற்சி / விளையாட்டு என ஊக்கப்படுத்தலாம். நீங்கள் பேலியோ உணவில் இருந்தால் மெதுவாக அவர்களும் வந்துவிடுவார்கள். வந்தால் தடுக்கவேண்டாம்.

பேலியோவில் எவ்வளவு கொழுப்பு உணவு உண்ணலாம் ஒரு நாளைக்கு ?

பேலியோவில் அளவு கணக்கு இல்லை. பசித்த பின் புசி என்பது தான் விதி. பசிக்காமல் – – அதுதான் அளவு கணக்கு இல்லையே என்று – எடுத்து திணிக்கவேண்டாம். பசி இல்லை என்றால் அந்த வேளை உண்ணாவிரதம் இருப்பதில் தவறில்லை. அல்சர் எல்லாம் வந்துவிடாது.

உண்ண விருப்பம் இருப்பதில்லை. அதனால் காலை உணவை தவிர்க்கலாமா ?

தவிர்க்கலாம். தவறில்லை. ஏற்கனவே சொன்னது போல், பசித்த பின் புசி.

பேலியோவில் டயபட்டீஸ், கொலஸ்டிரால், பி.பி மாத்திரைகள் தேவையில்லையாமே ? பேலியோ ஆரம்பித்த மறுநாள் இந்த மாத்திரைகளை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டுவிடலாமா ?

கூடாது. மருத்துவர் அனுமதி இன்றி எந்த மாத்திரையையும் நிறுத்த கூடாது !!!

Follow us on Social Media