பேலியோ பன்னீர் முட்டை இட்லி – தினேஷ் சிந்தாமனி

தேவையான பொருட்கள்:
பன்னீர் 200gm
முட்டை 2
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
எலுமிச்சை சாறு
சீரகம் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
உப்பு

செய்முறை:
பன்னீரை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். முட்டையை தனியாக நன்கு அடித்து பன்னீருடன் சேர்க்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி பன்னீர் முட்டை கலவையுடன் சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி குக்கரில் 10-15 நிமிடம் வேகவைத்தல் சுட சுட பன்னீர் முட்டை இட்லி தயார். தக்காளி சட்னி & தேங்காய் சட்னி உடன் டேஸ்ட் டக்கர்.

குறிப்பு – தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
தோசையாகவும் இட்டு சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1510849021

Follow us on Social Media