பேலியோ பிட்சா – Rtn கண்ணன் அழகிரிசாமி

குறிப்பு : நான் மஸ்ரூம் உபயோகித்ததால் இது “பேலியோ மஸ்ரூம் பிட்சா”…

வேக வைத்த காலிப்ளவர் உபயோகித்தால்
“பேலியோ காலிப்ளவர் பிட்சா”

வேக வைத்த மட்டன் உபயோகித்தால்
“பேலியோ மட்டன் பிட்சா”

வேக வைத்த சிக்கன் உபயோகித்தால்
“பேலியோ சிக்கன் பிட்சா”

Etc & etc உங்கள் விருப்பம்

தேவையான பொருட்கள் :

முட்டை : 2
பால் : 2 தேக்கரண்டி
மஸ்ரூம் : 5
பச்சை மிளகாய் : 1
சின்ன வெங்காயம் : 3
தக்காளி : 1
சீஸ் : 1 ஸ்லைஸ்
மிளகு தூள் : அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
உப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி

செய்முறை :

முட்டைகளை, பால் , உப்பு , மஞ்சள் தூள் & மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். (முட்டையில் பால் சேர்த்தால் நன்றாக உப்பி வருகிறது … நன்றி திரு Senthazal Ravi ji… இது அவரின் டிப்ஸ் )

ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி , வெங்காயம், பச்சை மிளகாய் & மஸ்ரூம் ஆகியவற்றை சிறிது உப்பு சேர்த்து அரைப்பதமாக வதக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும் .

குறைந்த தீயில் தவாவை வைத்து , தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றி , வதக்கிய பொருட்களை அதன் மீது தூவி விடவும் . மேலும் தக்காளியை வட்டமாக நறுக்கி அதன் மேல பரப்பவும் , சீஸ் துருவி தூவவும்.

முடி போட்டு மூடி , வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

பேலியோ பிட்சா தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media